பான், ஆதார் கார்டு இணைக்காதோர் கவனத்திற்கு – ‘இதை’ செய்யாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்!

0
பான், ஆதார் கார்டு இணைக்காதோர் கவனத்திற்கு - 'இதை' செய்யாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்!
பான், ஆதார் கார்டு இணைக்காதோர் கவனத்திற்கு - 'இதை' செய்யாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்!
பான், ஆதார் கார்டு இணைக்காதோர் கவனத்திற்கு – ‘இதை’ செய்யாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்!

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு. அத்துடன் வருமான வரி தாக்கல் செய்யும் போது பான் கார்டு அவசியமானதாகும். தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் விரைவில் முடிவடைய உள்ளதால் பொதுமக்கள் விரைவில் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பான் – ஆதார் இணைப்பு

இந்தியாவில் குடிமக்கள் அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் ஆதார் கார்டின் பயன்பாடு பல்வேறு துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது பான் கார்டையும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

மீண்டும் IPL போட்டிகளுக்கு திரும்பும் சுரேஷ் ரெய்னா – இதற்காக தான்? ரசிகர்கள் உற்சாகம்!

அத்துடன் வருமான வரிச் சட்டத்தின்படி ஆதார் கார்டுடன் பான் எண் இணைக்கப்படாத பான் கார்டு செயலிழந்ததாக அறிவிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின்படி ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் இம்மாத இறுதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பொதுமக்கள் விரைவாக பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ஏப்ரல் 5 முதல் மதுரை சித்திரை திருவிழா துவக்கம் – 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி!

இதனை 2 வழிகளில் இணைக்கலாம். முதலாவதாக பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க 12 இலக்க ஆதார் எண் > 10 இலக்க பான் எண் > உள்ளிட்டவற்றை டைப் செய்து SMS செயலி மூலமாக 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இப்பொழுது தங்களின் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செய்தியை பெறுவீர்கள். ஏற்கனவே தங்களின் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டீர்கள் என்றால் “இந்த பான் நம்பருடன் ஏற்கனவே ஆதார் இணைக்கப்பட்டுள்ளது” என்ற செய்தியை பெறுவீர்கள். இரண்டாவதாக www.incometax.gov.in என்ற இணையதள முகவரியில் சென்றும் பான் எண்ணை இணைக்கலாம். இதற்கு முக்கியமான ஒன்று பான் மற்றும் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!