TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மதிப்பெண் பெற எளிய வழிமுறைகள் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - மதிப்பெண் பெற எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - மதிப்பெண் பெற எளிய வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மதிப்பெண் பெற எளிய வழிமுறைகள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 VAO தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் தேர்வர்கள் எப்படி படிக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

TNPSC குரூப் 4 VAO தேர்வு

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது வரிசையாக தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவு முடிந்துள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் எப்படி படித்தால் எளிதில் அதிக மதிப்பெண் பெறலாம் என கீழே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இன்னும் குரூப் 4 தேர்வுக்கு குறைவான நாட்களே உள்ளதால் தேர்வர்கள் அதற்கு தகுந்தாற்போல தயாராக வேண்டும். ஏற்கனவே நீங்க படித்து முடித்துவிட்டால் அதனை திருப்பி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் எந்த பகுதியையும் புதிதாக படிக்க வேண்டாம். அவ்வாறு முக்கியமான பகுதியாக இருந்தால் சிறிய பகுதிகளை தேர்வு செய்து படிக்கலாம். நீங்கள் எந்த அளவிற்கு படிக்க வேண்டும் என்றால் வினாவை பார்த்தாலே விடை தெரியும் அளவிற்கு இருக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் கிடைக்கும் இலவச மாதிரி வினாக்களை பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு பாடமாக அல்லது ஒவ்வொரு வகுப்பாக மாதிரி வினாக்களை பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு பாடங்களில் இருந்தும் எப்படி எல்லாம் வினாக்கள் கேட்பார்கள் என்பதை முந்தைய ஆண்டுகளில் நடந்து முடிந்த தேர்வு வினாக்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் சில நாட்களுக்கு முன் தான் தேர்வுக்கு படிக்க தொடங்கி இருக்கீங்க என்றால் கவலை வேண்டாம்.திட்டமிட்டு படித்தால் எளிதில் படிக்கலாம். அவ்வாறு புதிதாக படிக்க தொடங்கியவர்கள் தமிழ் மற்றும் கணக்கு பாடங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

குரூப் 4 தேர்வில் அதிகமாக பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றனர். என்பதால் அதனை நன்றாக படிக்க வேண்டும். அதன் மூலமாகவே தேர்வில் வெற்றி பெறலாம். சில வகுப்பு பாடப்புத்தகங்களில் தேர்வில் வாராத பகுதிகள் இருக்கும் அதையும் படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். படிக்கும் நேரத்தை திட்டமிட்டு படிக்க வேண்டும். தினமும் 4 மணி நேரம் தமிழ், தினமும் 1 மணி கணக்கு, மீதமுள்ள 4-6 மணி நேரத்தை பொது அறிவு பகுதிக்கு ஒதுக்கி படிக்க வேண்டும். உங்களுக்கு எது கடினமாக இருக்குமோ அதற்கு அதிகம் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்

தமிழில் 100 மதிப்பெண்ணுக்கு வினாக்கள் கேட்கப்படும். அதில் 95 வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் என குறிக்கோளுடன் படிக்க வேண்டும். இந்த பகுதியில் தான் நாம் அதிகம் மதிப்பெண் பெற முடியும்.6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். நமக்கு தேர்வுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால், தமிழ் புத்தகங்களை படிக்கும் போது, குறிப்பு எடுத்து படிக்க வேண்டும். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். 6,7,8 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும்.

சுமார் 10 வினாக்கள் 6-10 ஆம் வகுப்பு புத்தகங்களை தாண்டி வெளியில் கேட்கப்படலாம். இதற்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை படித்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படிக்க தேவையில்லை. அடுத்து கணக்கு பகுதிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதில் நன்றாக பயிற்சி செய்தால் 25 வினாக்களில் 23-25 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம். இதற்கு 6-10 வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படித்தாலே 25 வினாக்களுக்கும் விடையளிக்கலாம்.அடுத்து பொதுஅறிவு பகுதியில் கவனம் செலுத்த வேண்டும். இதில் 75 வினாக்கள் கேட்கப்படும் அதில் 60-65 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கும் வகையில் தயாராக வேண்டும்.

நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படிக்க வேண்டும். செய்தித்தாள்களை படிக்கும்போது தேவையற்ற செய்திகளை படிக்காமல் பாடத்திட்டத்திற்கு தேவையான செய்திகளை படிக்க வேண்டும். பொருளாதாரம், மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள், விளையாட்டு, போன்ற நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். இந்த தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பள்ளி பாட புத்தகத்தை அடிப்படையாக கொண்டு இருப்பதால் அதை படித்தாலே போதுமானது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!