ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – ரயில் பயண நாட்கள், கட்டணம் உட்பட முழு விவரம் இதோ!

0
ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - ரயில் பயண நாட்கள், கட்டணம் உட்பட முழு விவரம் இதோ!
ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு - ரயில் பயண நாட்கள், கட்டணம் உட்பட முழு விவரம் இதோ!

ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – ரயில் பயண நாட்கள், கட்டணம் உட்பட முழு விவரம் இதோ!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கிறது. அத்துடன் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். இதற்கு வசதியாக சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி மலை ரயில் தனது சேவையை தொடங்கியுள்ளது.

சிறப்பு ரயில்கள்:

தமிழகத்தில் ஊட்டியில் நாளை மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து 200வது கோடை விழாவை தொடங்கி வைக்கவும் வருகை தர உள்ளார். இதனை காண வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவார்கள். மேலும் தற்போது தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் நாளுக்கு நாள் வெயில் வெளுத்து வாங்குகிறது. அத்துடன் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்க மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஊட்டிக்கு செல்ல நீலகிரி மலை ரயில் தனது சேவையை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மலைப் பகுதிகள் வழியாக ஊட்டிக்கு வந்தடைகிறது. இந்த ரயில் கோடை காலத்தை முன்னிட்டு மே 21ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு TNEB வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

இதையடுத்து மறுநாள் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு இந்த ரயில் ஊட்டியை சென்றடைகிறது. இதற்கு கட்டணமாக முதல் வகுப்பில் 600 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் 295 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை முதல் வகுப்பில் 445 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் 190 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் ஊட்டி முதல் கேத்தி வரை முதல் வகுப்பில் 260 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் 85 ரூபாயும் அத்துடன் குன்னூர் முதல் ஊட்டி வரை முதல் வகுப்பில் 350 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் 150 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!