FD திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிகரிப்பு – இரட்டிப்பு லாபம்!! உடனே சேருங்க!!
DCB வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில் அதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
FD திட்டம்:
பெரும்பாலான முதலீட்டாளர்கள் எந்தெந்த வங்கிகளில் அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் வங்கியான DCB வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அந்த வகையில், பொது வாடிக்கையாளர்களுக்கு FD திட்டத்திற்கு 8% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.60% வட்டி வழங்கப்படுகிறது. மேலும், இந்த புதிய வட்டி விகிதம் கடந்த டிச.13 ஆம் தேதியில் அமலுக்கு வந்துள்ளது.
அதாவது, 7 முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 3.75% வட்டியும், 46 முதல் 90 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 4% வட்டியும், 91 முதல் 6 மாதத்திற்கு 4.75% வட்டியும், 6 முதல் 10 மாதத்திற்கு 6.25% வட்டியும், 10 முதல் 12 மாதம் வரையிலான டெபாசிட்களுக்கு 7.25% வட்டியும், 700 நாட்கள் முதல் 25 மாதங்கள் வரை 7.55% வட்டியும், 25 மாதத்திற்கு 8% வட்டியும், 26 முதல் 37 மாதத்திற்கு 7.60% வட்டியும், 37 முதல் 61 மாதத்திற்கு 7.40% வட்டியும், 61 மாதங்களுக்கு 7.65% வட்டியும், 61 முதல் 120 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 7.25% வட்டியும் வழங்கப்படுகிறது. FD திட்டத்தின் கீழ் அதிக லாபம் பெற விரும்பினால் உடனடியாக இந்த வங்கியின் திட்டத்தில் கீழ் இணைந்து பயன் பெறவும்.