விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் முதல் பைனலிஸ்ட் இவர் தான் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3ன் முதல் பைனலிஸ்ட் இவர் தான் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3ன் முதல் பைனலிஸ்ட் இவர் தான் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் முதல் பைனலிஸ்ட் இவர் தான் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் முதல் பைனலிஸ்ட் ஆக ஸ்ருதிகா இந்த வார எபிசோடில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

குக் வித் கோமாளி ஸ்ருதிகா:

ஒவ்வொரு வாரமும் கலகலப்பாகவும், ஸ்வாரசியமாகவும் நகர்ந்து வரும் ஒரு சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது ‘குக் வித் கோமாளி’ தான். விஜய் டிவியில் கடந்த 2 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தற்போது 3வது சீசனாக ஒளிபரப்பாகி சுமார் 40 எபிசோடுகளை கடந்திருக்கிறது. இந்த சீசனில் 10 குக்குகள், கோமாளிகள் என பல புதிய முகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களை தவிர ஸ்ருதிகா, ரோஷினி, தர்ஷன், வித்யூலேகா, முத்துக்குமார், அம்மு அபிராமி என 6 பேர் இந்த ஷோவில் கலந்து கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூர்த்தி, கதிரை பார்க்கவிடாமல் தடுக்கும் ஜீவா – ப்ரோமோ ரிலீஸ்!

இதற்கிடையில் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத சில திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கடந்த வார எபிசோட் வரை ஃடப் போட்டியாளர் என எதிர்பார்க்கப்பட்ட கிரேஸ் திடீரென எலிமினேட் ஆகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தார். இதை தொடர்ந்து இந்த வாரம் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இம்மியூனிட்டிக்கான போட்டி நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இதில் குக்குகள் அனைவரும் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் கலந்து கொண்டிருந்தனர். இந்த எபிசோடில் ஸ்ருதிகா இம்மியூனிட்டி வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்த, இம்மியூனிட்டி பேண்டுடன் சேர்த்து அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. அதாவது, ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் டாப் 5 போட்டியாளர் வரிசையில் முதல் ஆளாக நுழைந்திருக்கிறார் ஸ்ருதிகா. இதை நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன் அறிவித்ததும் ஸ்ருதிகா எக்கச்சக்க குஷியாகி விட்டார். இப்போது கடுமையான போட்டிகளுடன் அடுத்த வாரம் எலிமினேஷன் சுற்றை நோக்கி நகர்ந்துள்ளது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!