மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூர்த்தி, கதிரை பார்க்கவிடாமல் தடுக்கும் ஜீவா – ப்ரோமோ ரிலீஸ்!

0
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூர்த்தி, கதிரை பார்க்கவிடாமல் தடுக்கும் ஜீவா - ப்ரோமோ ரிலீஸ்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூர்த்தி, கதிரை பார்க்கவிடாமல் தடுக்கும் ஜீவா - ப்ரோமோ ரிலீஸ்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூர்த்தி, கதிரை பார்க்கவிடாமல் தடுக்கும் ஜீவா – ப்ரோமோ ரிலீஸ்!

முல்லையும் கதிரும் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியே வந்து விட்டதால் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. தற்போது மூர்த்தியை பார்க்க கதிர் வந்தபோது மூர்த்தியை பார்க்க விடாமல் ஜீவா தடுப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை மற்றும் கதிர் இருவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியே சென்றதால் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் குடும்பத்தினர்கள் முல்லைக்கு ரூ 5 லட்சம் வரைக்கும் செலவு செய்து செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையை செய்தனர். முல்லைக்காக மட்டும் 5லட்சம் பணம் செலவு செய்ததை தற்போது வரைக்கும் மீனா குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

கோபத்தில் மயூராவை திட்டும் ராதிகா, எழிலை திட்டும் ஈஸ்வரி பாட்டி – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோட்!

மீனா மட்டுமல்லாமல் மீனாவின் அம்மா, அப்பா இருவரும் வீட்டிற்கு வந்து முல்லைக்காக மட்டும் 5 லட்சம் செலவு செய்வீர்களா என கண்டபடி பேசி விடுகின்றனர். இதனால் கடுப்பான முல்லையும் கதிரும் இதற்கு மேலும் இந்த வீட்டில் இருக்க கூடாது என முடிவெடுத்து வீட்டை விட்டு சென்றுவிடலாம் என முடிவெடுக்கின்றனர். நான் எப்படியாவது வேறு ஏதேனும் கடையில் வேலை செய்து அந்த ஐந்து லட்ச ரூபாய் கடனை அடைத்து விடுவேன். ஐந்து லட்சம் ரூபாய் கடனை அடைக்கும் வரை இந்த வீட்டின் வாசலை கூட மிதிக்க மாட்டேன் என்று கோபமாக கூறிவிட்டு கிளம்புகிறார்.

Exams Daily Mobile App Download

உடனே, மூர்த்தி இந்த வீட்டை விட்டு நீ சென்றுவிட்டால் மறுபடியும் இந்த வீட்டிற்குள் வரவே முடியாது என கூறுகிறார். மூர்த்தி கூறியதை சற்றும் காதில் வாங்காமல் முல்லையை மட்டும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு கதிர் செல்கிறார். பிறந்ததிலிருந்து கூடவே பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்த தம்பி தன்னை விட்டுச் செல்கிறான் என்ற வருத்தத்திலேயே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்துவிடுகிறது. மூர்த்தியை குடும்பத்தினர்கள் அனைவரும் சேர்ந்து மருத்துவமனையில் சேர்க்கின்றனர். கதிருக்கும் இந்த விஷயம் தெரிய வந்து மூர்த்தியை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார். ஏற்கனவே ஜீவா மீனாவிடம் உன்னால் தான் எங்கள் அண்ணனுக்கு இப்படி ஒரு நிலைமை என திட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே கதிரையும் மூர்த்தியை பார்க்க விடாமல் ஜீவா தடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here