கோபத்தில் மயூராவை திட்டும் ராதிகா, எழிலை திட்டும் ஈஸ்வரி பாட்டி – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோட்!

0
கோபத்தில் மயூராவை திட்டும் ராதிகா, எழிலை திட்டும் ஈஸ்வரி பாட்டி - 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோட்!
கோபத்தில் மயூராவை திட்டும் ராதிகா, எழிலை திட்டும் ஈஸ்வரி பாட்டி - 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோட்!
கோபத்தில் மயூராவை திட்டும் ராதிகா, எழிலை திட்டும் ஈஸ்வரி பாட்டி – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது தான் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.இந்நிலையில் இன்றைய எபிசோட் எப்படி இருக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்:

மக்களின் மனம் கவர்ந்த சீரியலான, பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கணவரான கோபிக்கு, கடந்த பல காலமாகவே ராதிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கான வழிகளிலும் கோபி ஈடுபட்டு வந்தார். இதற்காக பல பொய்களை கோபி ராதிகாவிடமும் பாக்கியவிடமும் சொல்லி வந்தார். இருப்பினும் சில தினங்களுக்கு முன்பு கோபி குடிபோதையில் பாக்கியா தான், தன் மனைவி என்பதை ராதிகாவிடம் உளறி விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகா கோபியை வெறுக்க ஆரம்பிக்கிறார். அவரை வீட்டிற்கு வர வேண்டாம் என துரத்திவிட்டார்.

TN Job “FB  Group” Join Now

மறுபுறம் ராதிகா வீட்டுக்கு அவருடைய அம்மா திடீரென வந்து நிற்கிறார். அப்போது ராதிகா கோபி என்னை நல்லா ஏமாத்திட்டாரு, அவர் தான் டீச்சரோட கணவர் என நடந்த விஷயங்களைக் கூறுகிறார். அதற்கு அவள் அம்மா இது தான் பிரச்சினையா? கோபி நீ பிரிந்து போயிட கூடாதுனு தானே எல்லாம் பண்ணிருக்காரு. அவர் உன் கூட மயூ கூடவும் வாழ தானே அப்படி பண்ணி இருக்காரு, விவாகரத்து வாங்கிட்டு தானே வராரு, அப்புறம் என்ன என கேட்க ராதிகா என்னமா இப்படி எல்லாம் சொல்றீங்க, டீச்சர் எவ்வளவு நல்லவங்க தெரியுமா? அவங்க வாழ்க்கையை அழிச்சிட்டு என்னால எப்படி சந்தோஷமா வாழ முடியும்? என ராதிகா சொல்கிறார்.

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – முதல்வரின் முக்கிய அறிவுரை!

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா மயூவிடம், கோபியை, நான் பார்க்க கூடாதுன்னு தான சொல்லிருக்கே , அவர் ஸ்கூலுக்கு வந்த அப்போ நீ ஏன் பார்த்த என மயூவை ராதிகா திட்டுகிறார். இனி உனக்கு நான் மட்டும்தான், கோபி நல்லவர் இல்ல, அவர் நம்ம வாழ்க்கையில் இல்லை என கூறுகிறார் . மறுபுறம் இனியா, அவளது அப்பா கோபியை சாப்பாடு ஊட்டி விட சொல்கிறார். மேலும் எழில், அமிர்தா கூட சந்தோஷமாக பேசி கொண்டிருந்தார். அப்போது செழியன் அதை பார்த்து விட்டு பாட்டியிடம் சொல்லிவிடுகிறார். அதற்கு பாட்டி ஒரு பொண்ணு கிட்ட பேச நேர காலம் இல்லையா என திட்டி வருகிறார். இதையடுத்து கோபியிடம் பாக்கியா, எப்போவும் சீக்கிரம் தூங்கிருவிங்க இன்னைக்கு என்னாச்சு என கேட்க உனக்கு ஏதாச்சும் தொந்தரவா இருக்க என கேட்கிறார். அதற்கு பாக்கியா நீங்க தூங்கல அதான் கேட்டேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!