அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – ஜூன் 26 இல் இறுதி முடிவு!
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு குறித்த இறுதி முடிவுகள் ஜூன் 26ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7வது ஊதியக்குழு:
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி 2020 முதல் தொடர்ந்து மூன்று தவணைகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகையானது ஜூலை 2021 மாதத்தில் வழங்கக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த இறுதி முடிவுகள் ஏதும் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. மே 8ம் தேதி நடக்க இருந்த தேசிய கூட்டு ஆலோசனை கவுன்சில் (ஜே.சி.எம்), நிதி அமைச்சகம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) அதிகாரிகளின் கூட்டம் கொரோனா அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
மகளிர் சுய உதவிக்குழுவின் கடன் தொகையை அரசு ஏற்பு? முதல்வருக்கு கோரிக்கை!
தற்போது இந்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டமானது ஜூன் 26ம் தேதி அன்று நடக்க இருப்பதாகவும், DA குறித்த இறுதி முடிவு அதில் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளது. இதனால் ஜூலை மாத ஊதியத்துடன் இந்த பலன்கள் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும், பணியாளர்களின் DA தற்போது 17% ஆக உள்ள நிலையில், 28% ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
மேலும், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்துடன் 15% DA சேர்க்கப்பட்டு மாதம் ரூ.2700 அதிகரிப்பதுடன் வருடத்திற்கு ரூ. 32,400 கிடைக்கும். தொடர்ந்து ஜூன் மாதத்திற்கான DA உயர்வு மட்டும் மேலும் சற்று தாமதமாக கிடைக்கலாம். ஆனால் அதுவும் 4% அதிகரித்து அக்டோபரில் மொத்தம் 32%கிடைக்கும். ஊழியர்கள் சங்கங்கள் கடந்த 18 மாதங்களுக்கான DA நிலுவை தொகை உடனடியாக கொடுக்க கோரிக்கை வைத்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன்படி, லெவல் -1 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ .37,554 வரை இருக்கும் என்று ஜே.சி.எம் தேசிய கவுன்சிலின் சிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 7 வது ஊதியக்குழுவின் ஊதிய பட்டியல் அளவுகோலின் படி, லெவல் -13 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ .1,23,100 முதல் ரூ .2,15,900 மற்றும், லெவல் -14 ன் படி, ரூ. 44,200 முதல் 2,18,200 வரை ஒரு ஊழியருக்கு DA நிலுவைத்தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கை விரித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
Balamurugan.j