SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணமோசடி எச்சரிக்கை!

1
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பணமோசடி எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பணமோசடி எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணமோசடி எச்சரிக்கை!

பெரும்பாலான வங்கிகளில் பணம் அனுப்புதல், பணம் பெறுதல் உள்ளிட்ட சேவைகள் இணைய வழியாக நடைபெற்று வரும் நிலையில், மோசடிகளில் இருந்து பாதுகாத்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு சில எச்சரிக்கைகளை SBI வங்கி வழங்கியுள்ளது.

வங்கி மோசடி

இந்தியாவில் பல சேவைகளும் தற்போது டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கின்ற நிலையில், வங்கி சேவைகளும் தற்போது இணைய வழியில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒருவரது மொபைல் எண்ணை வைத்தே பண பரிமாற்றங்கள் நடந்து வருகிறது. அதிலும் கொரோனா போன்ற நோய் தொற்று காலத்தில் இந்த இணைய வழி வங்கி சேவைகள் பலருக்கு நன்மை பயக்குகிறது. அதன் படி பணம் அனுப்புதல், பெறுதல் போன்ற அனைத்து செயல்களும் இணைய பரிவர்த்தனைகள் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த இணையவழி பரிமாற்றத்திலும் சில சிக்கல்கள் காணப்படுவதுண்டு.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – ஜூன் 26 இல் இறுதி முடிவு!

அந்த வகையில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து எளிதாக ஒருவரால் பணத்தை கொள்ளை அடிக்கவோ, மோசடி செய்யவோ முடிகிறது. இந்த சம்பவங்களை தவிர்ப்பதற்கு வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகிறது. அந்த வகையில் மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க SBI வங்கி சில எச்சரிப்புகளை வழங்கியுள்ளது. அதன் படி, எந்தவொரு ஆதாரமற்ற இணைப்புகளை பயன்படுத்தி வங்கி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் உள்ளிட்ட எவ்விதத்திலும் யாருக்கும் வழங்க வேண்டாம். தெரியாத எண்களில் இருந்து அழைத்து SBI, RBI, அரசு அலுவலகங்கள், காவல் துறையில் இருந்து போன் செய்வதாகவும், KYC அப்டேட் கேட்டும் சில மோசடிகள் நடைபெறுகிறது. அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே போல பயனாளரின் பிறந்த தேதி, டெபிட் கார்ட் அட்டை, ஐ.டி, கடவுச்சொல், டெபிட் கார்ட் பின், OTP உள்ளிட்ட எந்த தகவல்களையும் அறிமுகம் இல்லாதவர்களிடம் பகிரக்கூடாது. மேலும் சமூக வலைதளங்கள் மற்றும் SMS களில் வரும் சலுகைகளை வாடிக்கையாளர்கள் தவிர்க்க வேண்டும் என SBI நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. என்னை அறியாமல் செய்த தவறு நானும் வந்த கேஒய்சி மெசேஜ் நம்பி ரூபாய் 6000 இழந்து உள்ளேன் தயவு செய்து எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!