இந்திய உணவுக் கழக ஆட்சேர்ப்பு 2022 – மாதம் ரூ.80,000/- ஊதியம்
இந்திய உணவு கழகத்தில் ஏற்பட்டுள்ள General Manager (Engineering) பணிக்கான காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.80,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் எனவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Food Corporation of India (FCI) |
பணியின் பெயர் | General Manager (Engineering) |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
General Manager (Engineering) காலிப்பணியிடங்கள்:
- இந்திய உணவு கழகத்தில் (FCI) General Manager (Engineering) பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.
General Manager கல்வி தகுதி:
- General Manager (Engineering) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
General Manager அனுபவ விவரம்: - இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / PSU அரசு நிறுவனங்களில் Civil Engineer பணியில் Pay Level 13 (CDA) / E-7 (IDA) என்ற ஊதிய அளவின் கீழ் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
General Manager வயது வரம்பு:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.07.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 61 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்திய உணவு கழக சம்பளம்:
- General Manager (Engineering) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.80,000/- மாத சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவு கழகம் தேர்வு செய்யும் விதம்: - இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவு கழக விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 16.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.