பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? அவரே சொன்ன பதில்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? அவரே சொன்ன பதில்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? அவரே சொன்ன பதில்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? அவரே சொன்ன பதில்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா காதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், சீரியலில் இருந்து விலக இருப்பதாக வெளியான தகவலுக்கு அவரே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா:

தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் முக்கிய வில்லி கதாபாத்திரமான வெண்பாவாக நடித்து வருபவர் பரீனா. அவருக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவரது கணவர் ரஹ்மான் சினிமா துறையை சார்ந்தவர் தான். இந்நிலையில் பரீனாவிற்கு தற்போது 9 மாதங்கள் ஆகிறது. ஆனாலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் அவருக்கு குழந்தை பிறந்த பின் சீரியலில் இருந்து விலகி விடுவார் என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மீண்டும் சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதில் பாரதி கண்ணம்மா சீரியல் நான் இல்லாமல் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பி இருக்கிறார். குழந்தை பிறந்த பின் சிறிது காலம் இடைவெளி விட்டு மீண்டும் சீரியலில் தொடருவேன் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருந்தாலும் தொடர்ந்து சீரியலில் தனது கடமை தான் முக்கியம் என நடித்து வரும் அவர் எப்படி சீரியலில் இருந்து விளங்குவார் என கேள்வி எழுந்துள்ளது.

‘மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கலாம்’ – நடிகை சமந்தாவிற்கு அறிவுரை கூறிய நீதிமன்றம்!

அவர் இடைவெளி எடுக்கும் நேரத்திற்கு ஏற்ப கதையில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினியும் சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்து வருவதால் தொடர்ந்து சீரியல் நிர்வாகம் குழப்பத்தில் இருக்கிறது. அதுமட்டுமின்றி பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வரக்கூடாது என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். விஜய் டிவி TRP இல் தொடர்ந்து நம்பர் 1 இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!