பிரசவத்திற்கு பின் போட்டோஷூட் நடத்திய “பாரதி கண்ணம்மா” பரீனா – ரசிகர்கள் உற்சாகம்!

0
பிரசவத்திற்கு பின் போட்டோஷூட் நடத்திய
பிரசவத்திற்கு பின் போட்டோஷூட் நடத்திய "பாரதி கண்ணம்மா" பரீனா - ரசிகர்கள் உற்சாகம்!
பிரசவத்திற்கு பின் போட்டோஷூட் நடத்திய “பாரதி கண்ணம்மா” பரீனா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், பிரசவத்திற்கு பின் மீண்டும் பழைய பொலிவுடன் அவர் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் கதைக்கு முக்கிய காரணமாக வில்லி வெண்பா தான் இருக்கிறார். அவர் தான் பாரதி மற்றும் கண்ணம்மாவை பிரிக்க பல சித்து விளையாட்டுகளை விளையாடுகிறார். இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனா சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும் பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் வரை அவர் சீரியலில் நடித்து வந்தார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் குழுவினருடன் இணைந்த ரோஷினி, அகிலன் – ரசிகர்கள் உற்சாகம்!

குடும்பம் ஒரு பக்கம் இருந்தாலும், நடிப்பு முக்கியம் என்பதால் அவர் காட்டிய முக்கியத்துவம் மக்களிடம் பெரிதும் பேசப்பட்டது. பலர் அது குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அது குறித்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அவர் நலமுடன் அவருக்கு மகன் பிறந்திருப்பதாகவும் இது சுகப்பிரசவம் என தெரிவித்தார். அவர் சீரியலில் எப்போது நடிக்க வருவார் என பாரதி கண்ணம்மா ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

வருங்கால கணவருடன் ‘விஜய் டிவி’ நட்சத்திரா பதிவிட்ட புகைப்படம் – வைரலாக்கும் ரசிகர்கள்!

இந்நிலையில் வெண்பா பரீனா பிரசவத்திற்கு பின் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். மீண்டும் அதே அழகுடன் பொலிவு குறையாமல் தற்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவர் களத்தில் இறங்கியதை நினைத்து உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் மீண்டும் பாரதி கண்ணம்மாவில் வெண்பா வர வேண்டும். அப்போது தான் சீரியலில் மேலும் விறுவிறுப்பு அதிகரிக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here