‘பாரதி கண்ணம்மா’ சீரியல் குழுவினருடன் இணைந்த ரோஷினி, அகிலன் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் தொடக்கத்தில் நடித்த நடிகை, நடிகர்கள் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மனம் கவர்ந்த முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் முதலில் குழந்தையாக இருக்கும் கண்ணம்மா கருப்பாக இருப்பதால் பல இடங்களில் நிராகரிக்கப்படுகிறார். அதன் பின் பெரியவளாக மாறி அவரை டாக்டர் ஒருவர் துரத்தி துரத்தி காதலிக்கிறார். அதற்கு டாக்டர் பாரதியின் அம்மா எதிர்ப்பு தெரிவிக்க வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார். பின் இருவரும் சந்தோசமாக இருக்க பாரதியை வெண்பா என்பவர் ஒருதலையாக காதலிக்கிறார்.
வருங்கால கணவருடன் ‘விஜய் டிவி’ நட்சத்திரா பதிவிட்ட புகைப்படம் – வைரலாக்கும் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மாவும் சேர்ந்து இருக்காமல் அவரை பிரிக்க திட்டமிட்டு பிரிக்கிறார். இந்நிலையில் பாரதி வீட்டில் முன்னதாக அறிவு கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வந்தார். அதன் பின் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பாரதிக்கு தங்கை கதாபாத்திரம் இருந்தது. அவருடைய மகள் கருப்பாக இருப்பதால் பாரதி அம்மா சௌந்தர்யா அவரை ஒதுக்குவது போல கதை கொண்டு செல்லப்பட்டது.
‘ராஜா ராணி 2’ சீரியலில் மாற்றத்தை ஏற்படுத்திய நடிகை ஆலியா மானஸா – கதையில் திடீர் திருப்பம்!
பாரதி கண்ணம்மா சீரியலில் முன்னதாக நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது பழைய புகைப்படம் என்றாலும் அதில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கின்றனர். மேலும் சீரியலில் இருந்து விலகிய அகில் மற்றும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி என அனைவரும் இந்த புகைப்படத்தில் இருப்பதால் ரசிகர்கள் அவர்கள் மீண்டும் இந்த சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.