வருங்கால கணவருடன் ‘விஜய் டிவி’ நட்சத்திரா பதிவிட்ட புகைப்படம் – வைரலாக்கும் ரசிகர்கள்!

0
வருங்கால கணவருடன் 'விஜய் டிவி' நட்சத்திரா பதிவிட்ட புகைப்படம் - வைரலாக்கும் ரசிகர்கள்!
வருங்கால கணவருடன் 'விஜய் டிவி' நட்சத்திரா பதிவிட்ட புகைப்படம் - வைரலாக்கும் ரசிகர்கள்!
வருங்கால கணவருடன் ‘விஜய் டிவி’ நட்சத்திரா பதிவிட்ட புகைப்படம் – வைரலாக்கும் ரசிகர்கள்!

விஜய் டிவிக்கு வந்து விட்டாலே அது வரையிலும் பிரபலமாக நட்சத்திரங்கள் கூட மக்கள் மத்தியில் அதிக பிரபலத்தை அடைந்து விடுகின்றனர். அந்த வரிசையில் நடிகை நட்சத்திரா தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டிருந்ததை ரசிகர்கள் பல மாதங்கள் கழித்து தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

நடிகை நட்சத்திரா:

சின்னத்திரையில் பிரபலங்கள் தங்கள் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டாலும், மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைக்க அவர்கள் பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் நடிகை நட்சத்திரா பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பல சேனல்களிலும் பணியாற்றியுள்ளார். தனது துறுதுறுப்பான பேச்சின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றார். இதன் மூலம் பல குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

விஜய் டிவியில் இருந்து வெளியேறிய விஜே பாவனா? அதுவும் இந்த சேனலில் ரீஎன்ட்ரி! ரசிகர்கள் ஷாக்!

பின்னர் சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முதன்முதலாக இவர் சன் டிவியில் சீரியல்களில் தான் நடிக்க துவங்கினார். சன் டிவியில் வாணி ராணி, லக்ஷ்மி ஸ்டோர்ஸ், நாயகி போன்ற சீரியல்களில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடிகர் தீபக் உடன் நடித்து வருகிறார். இந்த தொடரின் மூலம் மீண்டும் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் நட்சத்திரா. இவர் பல வருடங்ககளாக ராகவ் என்பவரை காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.

‘ராஜா ராணி 2’ சீரியலில் மாற்றத்தை ஏற்படுத்திய நடிகை ஆலியா மானஸா – கதையில் திடீர் திருப்பம்!

அப்போது நட்சத்திராவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி மிகவும் ட்ரெண்டிங்கில் இருந்தது. தற்போது நட்சத்திரா தமிழும் சரஸ்வதியும் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், நட்சத்திராவின் நிச்சய புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது மீண்டும் வைரலாக்கி வருகின்றனர். இதனால் நட்சத்திரா தனது வருங்கால கணவரான ராகவ் உடன் சேர்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரவி வருகிறது. விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நட்சத்திராவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!