‘ராஜா ராணி 2’ சீரியலில் மாற்றத்தை ஏற்படுத்திய நடிகை ஆலியா மானஸா – கதையில் திடீர் திருப்பம்!

0
'ராஜா ராணி 2' சீரியலில் மாற்றத்தை ஏற்படுத்திய நடிகை ஆலியா மானஸா - கதையில் திடீர் திருப்பம்!
'ராஜா ராணி 2' சீரியலில் மாற்றத்தை ஏற்படுத்திய நடிகை ஆலியா மானஸா - கதையில் திடீர் திருப்பம்!
‘ராஜா ராணி 2’ சீரியலில் மாற்றத்தை ஏற்படுத்திய நடிகை ஆலியா மானஸா – கதையில் திடீர் திருப்பம்!

விஜய் டிவி ‘ராஜா ராணி’ சீசன் 2 சீரியலில் நடித்து வரும் நடிகை ஆலியா மானஸா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் போலீஸ் அதிகாரியாக அதிரடி காட்ட முடியாததால் இந்த கதையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆலியா மானஸா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியலான ‘ராஜா ராணி 2’ தற்போது 300 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக வெளியாகி வருகிறது. ஆரம்பத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் துவங்கப்பட்ட இந்த சீரியல் அவ்வப்போது சில சறுக்கல்களை சந்தித்து வந்தது. இதற்கிடையில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மற்றும் சந்தியாவின் ரொமான்டிக் காட்சிகள் மூலம் இந்த சீரியலின் TRP ரேட்டிங் சற்று உயர்வை கண்டு வருகிறது.

நயன் மற்றும் விக்கி பற்றி புகழ்ந்து தள்ளிய சமந்தா – ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ருசிகரம்!

இந்நிலையில் இந்த தொடரில் சந்தியா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஆலியா மானஸா 2வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார். முன்னணி சின்னத்திரை நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஆலியா மானஸாவுக்கு ஏற்கனவே ஐலா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறப்புக்கு பின்பாக ‘ராஜா ராணி 2’ சீரியலில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கமிட் ஆன ஆலியா கடுமையாக போராடி தனது உடல் எடையை குறைத்தார்.

இப்போது இந்த சீரியல் துவங்கி நன்றாக போய் கொண்டிருக்கும் சமயத்தில் இவர் 2வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார். இவரது இந்த கர்ப்பம் காரணமாக நடிப்பதில் எந்தவித சிக்கலும் வராது என அறிவித்துள்ள ஆலியா மானஸா, போலீஸ் அதிகாரியாக தொடர்வாரா என்ற கேள்விகள் ரசிகர்களுடையே எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகை ஆலியா மானஸாவின் நிலைமைக்கு ஏற்றவாறு ‘ராஜா ராணி 2’ சீரியலின் கதைக்களத்தில் இயக்குனர் பிரவீன் பென்னட் சில மாற்றங்களை ஏற்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாசமலராக கவனம் ஈர்க்கும் விஜே விஷால் & நேஹா – வைரலாகும் வீடியோ!

ஏற்கனவே ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த நடிகை பரினா பிரசவத்துக்காக சீரியலை விட்டு சில காலம் விலகி இருக்கும் நிலையில், அவரது வெண்பா கதாப்பாத்திரம் ஜெயிலில் இருப்பதாக காட்டி இருக்கிறார் இயக்குனர் பிரவீன் பென்னட். அதே போல ‘ராஜா ராணி 2’ சீரியலிலும் இனி வரும் காலங்களில் நடிகை ஆலியா மானஸா கர்ப்பமாக இருப்பது போல காட்சிகள் இடம்பிடிக்க இருப்பதாக தெரிகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here