விஜய் டிவியில் இருந்து வெளியேறிய விஜே பாவனா? அதுவும் இந்த சேனலில் ரீஎன்ட்ரி! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவியில் இருந்து வெளியேறிய விஜே பாவனா? அதுவும் இந்த சேனலில் ரீஎன்ட்ரி! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் இருந்து வெளியேறிய விஜே பாவனா? அதுவும் இந்த சேனலில் ரீஎன்ட்ரி! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் இருந்து வெளியேறிய விஜே பாவனா? அதுவும் இந்த சேனலில் ரீஎன்ட்ரி! ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளரான விஜே பாவனா தற்போது கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.

விஜே பாவனா:

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களுக்கு தனி பங்கு உண்டு. பிரியங்கா, மாகாபா, ரக்ஷன், மணிமேகலை, அர்ச்சனா, நிஷா என பல பிரபலமான தொகுப்பாளர்கள் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் விஜே பாவனா. முந்தைய காலத்தில் இவரும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தார். மேலும் இவர் சிறந்த நடன கலைஞரும் கூட. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது அனைவராலும் மறக்க முடியாத ஒன்று.

‘ராஜா ராணி 2’ சீரியலில் மாற்றத்தை ஏற்படுத்திய நடிகை ஆலியா மானஸா – கதையில் திடீர் திருப்பம்!

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் இவர் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். மாயந்தி லாங்கருக்குப் பிறகு இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு தொகுப்பாளர் என்ற பெருமை இவரையே சேரும். 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது கருத்து தெரிவித்த பெண் தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர். தொகுப்பாளர், நடனம் அது மட்டுமில்லாமல் இவர் சிறந்த பாடகி கூட, 2020 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் தரன் இயக்கத்தில் “வீராதி வீரா” என்ற பாடல் பாடி இருக்கிறார்.

நயன் மற்றும் விக்கி பற்றி புகழ்ந்து தள்ளிய சமந்தா – ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ருசிகரம்!

பாவனா கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால் அவரை பலர் டிவியில் பார்க்க முடியாமல் மிஸ் செய்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் விஜய் டிவியில் வேலை செய்ய போவது இல்லையாம். அவர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் Dance Vs Dance 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!