2023ல் ஞாயிற்று கிழமைகளில் வரும் பண்டிகைகள்.. வார நாட்களில் விடுமுறை அறிவிப்பு – வைரல் நியூஸ்!

0
2023ல் ஞாயிற்று கிழமைகளில் வரும் பண்டிகைகள்.. வார நாட்களில் விடுமுறை அறிவிப்பு - வைரல் நியூஸ்!
2023ல் ஞாயிற்று கிழமைகளில் வரும் பண்டிகைகள்.. வார நாட்களில் விடுமுறை அறிவிப்பு - வைரல் நியூஸ்!
2023ல் ஞாயிற்று கிழமைகளில் வரும் பண்டிகைகள்.. வார நாட்களில் விடுமுறை அறிவிப்பு – வைரல் நியூஸ்!

அடுத்த வருடம் பெரும்பாலான பண்டிகைகள் வார இறுதி நாட்களில் தான் வருகின்றன. இதன் காரணமாக மக்கள் சிறிது மன வருத்தத்தில் உள்ளனர்.

விடுமுறை:

பண்டிகை நாட்கள் என்றாலே மக்கள் விடுமுறை குறித்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க தொடங்கி விடுவர். தற்போதுள்ள நெருக்கடியான வாழ்கை முறையில் மக்கள் அன்றாட பணிகளில் மிகவும் பிஸியான நேரத்தை தான் அனுபவிக்கின்றனர். ஆனால் விடுமுறை நாட்களில் இதற்கு நேர்மாறாக மிகவும் ரிலாக்ஸ் ஆக கழிக்கவே விரும்புகின்றனர். இந்நிலையில், நடப்பு ஆண்டு கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு இரண்டு தினங்களும் வார இறுதி நாட்களான ஞாயிற்று கிழமை அன்று வந்துவிட்டது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் 2023ம் ஆண்டு பல பண்டிகைகள் வார இறுதி நாட்களில் தான் வர உள்ளன. இதனால் எப்போதும் கிடைக்கும் விடுமுறை நாட்கள் குறைந்து உள்ளதாக பலர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இணையத்தில் வெளியான வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, கனடா நாட்டில் இது போன்ற பண்டிகைகள் வார இறுதி நாட்களில் வந்துவிட்டால், அதற்கு முந்தைய வார நாள் அல்லது அடுத்த வார நாளில் அதாவது திங்கள் கிழமை விடுமுறை அளிப்பார்களாம்.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு – கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? அமைச்சர் பதில்!

Exams Daily Mobile App Download

சமீபத்தில் நடந்து முடிந்த, கிறிஸ்துமஸ்க்கு அடுத்த நாள் பாக்ஸிங் டே என்று கொண்டாடும் வழக்கம் இருப்பதால் அதற்கும் விடுமுறை அளிப்பார்களாம். இதனால் நடப்பாண்டில் ஞாயிற்று கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறையை செவ்வாய் கிழமைக்கு மாற்றியுள்ளதாகவும், இதனால் சனிக்கிழமை முதல் செவ்வாய் கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அங்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவினை பார்த்து பலரும் கடுப்பாகி, கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!