வங்கிகளை விட அதிக வட்டி – EPF திட்டத்தின் சிறப்பு சலுகை!!

1
வங்கிகளை விட அதிக வட்டி - EPF திட்டத்தின் சிறப்பு சலுகை!!
வங்கிகளை விட அதிக வட்டி - EPF திட்டத்தின் சிறப்பு சலுகை!!
வங்கிகளை விட அதிக வட்டி – EPF திட்டத்தின் சிறப்பு சலுகை!!

நிறுவங்களின் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை சேர்த்து வைக்க EPF திட்டம் உதவுகிறது. இந்த திட்டம் அதன் பயனாளர்களுக்கு வேறு சில சலுகைகளையும் வழங்குகிறது.

EPFO திட்டம்

நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்கும் ஒவ்வொரு பணியாளர்களும் தங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள எதுவாக உள்ளது EPF திட்டம். பொதுவாக 20 பணியாளர்கள் கொண்டுள்ள எந்தவொரு நிறுவனமும் இந்த EPF முறையை செயல்படுத்தலாம். இந்த திட்டம் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் ஆரோக்கியமான வாழ்வை தருகிறது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு நிறுவனங்களிலும் குறைந்தபட்சம் 15,000 சம்பளமாக பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு PF பணம் பிடித்தம் செய்யப்படும்.

TN Job “FB  Group” Join Now

அலுவலகங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஒரே வித சம்பளம் வழங்கப்படுவதில்லை. அதனடிப்படையில் ஒருவர் பெரும் சம்பளத்திலிருந்து 12% தொகை பிடித்தம் செய்யப்பட்டு அது PF கணக்கில் செலுத்தப்படும். இந்த 12% பணம் ஊழியர்களின் 8.33% பென்ஷன் திட்டத்திலும், 3.67% வருங்கால வைப்பு திட்டத்திலும் செலுத்தப்படும். இந்த EPFO சேமிப்பு திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் வரி சலுகைகள் கிடைக்கின்றன. அதே போல் பணியாளர்களின் கணக்கிற்கு ரூ.7.50 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தினால் ஊழியருக்கு வரி விதிக்கப்படும்.

விவேகானந்தன் முதல் பத்ம ஸ்ரீ விவேக் வரை – சின்ன கலைவாணர் கடந்து வந்த பாதை!!

ஊழியர்கள் கணக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாக உபயோகத்தில் இல்லை என்றாலோ, வேலையை விட்டு நீங்கினாலோ EPF கணக்கிலிருந்து எடுக்கும் பணத்திற்கு வரி கிடையாது. EPF திட்டத்தின் கீழ் பென்சன் பெற விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 10 வருடம் EPF திட்டத்தில் பங்களிப்பு கொடுத்திருக்க வேண்டும். அதே சமயம் பென்சன் பெறுவதற்கு 58 வயது வரை காத்திருக்க வேண்டும். மேலும் EPF கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் அந்த கணக்கிலிருந்து 75 சதவீதம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – தொழில் நிறுவனங்கள் நடவடிக்கை!!

திருமணம் போன்ற காரியங்களுக்காக ஒருவர் EPF கணக்கிலிருந்து 50 சதவீத பணத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். மாத சம்பளம் வாங்குபவர்களின் சம்பளத்திலிருந்து பெருமளவிலான தொகை EPF திட்டத்துக்கு கொடுக்கும் போது, மத்திய அரசு EPF கணக்கில் இருக்கும் தொகைக்கு வட்டி கொடுக்கும். அதன்படி 2020-2021 நடப்பு நிதியாண்டில் 8.50 சதவீதம் வட்டி வழங்க EPF அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி வங்கிகளின் FDக்கான வட்டியை ஒப்பிடும் போது EPF வட்டி அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. கடினமாக உழைப்பிற்க்கு கிடைக்கும் பணம். தொழிலாலருக்கு பாதுகாப்பு பணம்……..இதற்கு இன்னும் அதிகமாக கூட வட்டி கொடுக்கலாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!