EPFO ல் ஓய்வுதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – முழு விவரங்கள் இதோ!

0
EPFO ல் ஓய்வுதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் - முழு விவரங்கள் இதோ!
EPFO ல் ஓய்வுதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் - முழு விவரங்கள் இதோ!
EPFO ல் ஓய்வுதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – முழு விவரங்கள் இதோ!

இந்தியாவில் பென்சன் பெறுபவர்களுக்கான புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய திட்டத்தின் மூலம் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பயன்களை பற்றி இப்பதிவில் விரிவாக காண்போம்.

புதிய திட்டம்:

நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு என்று தனி விதிமுறைகள் உள்ளன. ஊழியர்கள் தேவை அறிந்து அவை புதுப்பிக்கப்படும். அந்த வகையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சாதகமான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் வேலையில் இருந்து பணி ஓய்வு பெறும் போது அரசாங்கம் மாதம் மாதம் பென்ஷன் வழங்குவதற்காக பிராவிடண்ட் ஃபண்ட் உடன் பென்ஷனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஊழியர் ஓய்வூதிய திட்டமானது, ஓய்வூதியர்களுக்கு என்று வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய சம்பளத்தின் வரம்பை நீக்குவது குறித்து பேசி வருகிறது. தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் மாதம் ரூ.15,000 வரை இருந்த நிலையில் இதனை நீக்குவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஊழியர்களின் ஓய்வூதியத்தை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது என்று இந்திய யூனியன் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ)தாக்கல் செய்த மனுவின் விசாரணையை ஒத்தி வைத்த போதிலும் இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் ஓய்வூதியம் ரூ.15000 என்கிற வரம்பு நீக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசு ஓய்வுதாரர்களுக்கான சிறப்பு வசதி – அஞ்சல் துறை அறிவிப்பு

ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15,000 கருதப்படுகிறது. இதன்படி இபிஎஸ்-ன் கீழ் ஒருவர் பெறக்கூடிய ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும். ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால் ஓய்வூதியம்= (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x வருடங்கள் இபிஎஸ் பங்களிப்பு)/70 என்று கணக்கிடப்படுகிறது. ஒருவரின் ஓய்வூதியம் 15,000 என்றால் 30 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் மாதாந்திர ஓய்வூதியம்=15,000X30/7= ரூ 6428 ஆகும். மேலும் பணியாளர் 14 ஆண்டுகள் 7 மாதங்கள் பணியாற்றியிருந்தால்,அது 15 ஆண்டுகளாக கணக்கிடப்படும். அதே சமயம் 14 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி புரிந்திருந்தால் அது 14 ஆண்டுகளாக கணக்கிடப்படும். மேலும் இபிஎஸ்-ன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000,என்றும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!