தமிழகத்தின் 10 இடங்களில் இன்ஜினியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு – அமைச்சர் முக்கிய தகவல்!

0
தமிழகத்தின் 10 இடங்களில் இன்ஜினியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு - அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தின் 10 இடங்களில் இன்ஜினியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு - அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தின் 10 இடங்களில் இன்ஜினியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு – அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பொறியியல் படிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பேரவையில் கூறியுள்ளார்.

பொறியியல் கல்வி

தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கிடையே பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. அத்துடன் பொறியியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளும் கிடைப்பதில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொறியியல் கல்லூரிகள் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. சில பொறியியல் கல்லூரிகள் நஷ்டத்தில் செயல்பட்டு வந்ததால் அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. அதனால் பொறியியல் படிப்பில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

PM KISAN பயனர்கள் கவனத்திற்கு – 11வது தவணைப்பணத்தை பெற இதை செய்ய வேண்டும்? முழு விவரம் இதோ!

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற பேரவையில் தற்போது ஒவ்வொரு துறை வாரியான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது உயர்கல்வி துறை மீதான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பொறியியல் படிப்பில் பல்வேறு மாற்றத்தை கொண்டு வர உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பேரவையில் கூறியுள்ளார். மேலும் இவர் கூறியதாவது, பொறியியல் படிப்புகளில் பாடத்திட்டங்கள் அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் மாற்றப்படும் என்று கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

அத்துடன் தமிழகத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படும். இந்த கலந்தாய்வு சென்னையில் மட்டும் நடைபெறுவதால் சில நேரங்களில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களால் கலந்து கொள்ள முடியாமல் உள்ளது. அதனால் இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் 10 இடங்களில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடத்த அரசு பரிசீலனை மேற்கொள்ள உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பேரவையில் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!