அரசு துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 25,500 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
அரசு துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - 25,500 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
அரசு துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - 25,500 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
அரசு துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 25,500 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஸ்டெனோகிராபர் உட்பட பல பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புகிறது. இந்தப் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தற்போது தொடங்கிவிட்டது. மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அரசு வேலைவாய்ப்பு:

இந்தியாவில் அரசு வேலைகளுக்குத் தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது பலரது வாழ்க்கை லட்சியமாகவே உள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் அரசு வேலையில் சேர அதிகம் படிக்காத இளைஞர்களும் முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு பணி தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.இந்த வகையில் Stenographer (Grade III), Driver (Ordinary Grade), Work Assistant-A பணிகளுக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய விருப்பம் இருப்பவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரங்கள் : இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் கீழ் மொத்தம் 89 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இங்கு 72 பணி உதவியாளர் பணியிடங்களும், 11 ஓட்டுநர் பணியிடங்களும், 6 ஸ்டெனோகிராபர் கிரேடு III பணியிடங்களும் அடங்கும்.

விண்ணப்பதாரர் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் வயது வரம்பு : விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: ஸ்டெனோகிராஃபர் பணிக்கு மாதம் 25500 ரூபாய் சம்பளம் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கு 19900 ரூபாயும், பணி உதவியாளர் பணிக்கு 18000 ரூபாயும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான recruit.barc.gov.inஇல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31 ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 செலுத்த வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!