பெங்களூரில் மார்ச் 27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு!

1
பெங்களூரில் மார்ச் 27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு!
பெங்களூரில் மார்ச் 27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு!
பெங்களூரில் மார்ச் 27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து பெங்களூரில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலையில்லா இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு முகாம்:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் பெரும்பாலோனர் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்தனர். அத்துடன் அரசும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர முடியாத நிலை இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து பெங்களூரில் கும்பல்கோட்டில் உள்ள ராமோஹள்ளி அருகில் உள்ள ராஜராஜேஸ்வரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வருகிற 27ம் தேதி அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை எதிர்பார்க்க என்ன காரணம்? நிதி ஆலோசகர் சொன்ன விளக்கம்!

இம்முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சாரா, நிதி, ஆட்டோமொபைல், உற்பத்தி, விருந்தோம்பல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இம்முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பியூசி, ஐடிஐ, இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

TN MRB தமிழக மருத்துவத்துறையில் ரூ.1,15,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அத்துடன் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்கலாம். இதில் கலந்து கொள்பவர்கள் அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

அத்துடன் தங்களின் சுயவிவரக்குறிப்பு, பாஸ்போர்ட் புகைப்படம் உள்ளிட்டவைகளையும் கொண்டு வர வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற 99649 07444, 79750 14738 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!