ஒருபுறம் சீரியல் நடிகை, மறுபுறம் குத்துசண்டை வீராங்கனை – ஐரா அகர்வால் கொடுத்த ஷாக்!

0
ஒருபுறம் சீரியல் நடிகை, மறுபுறம் குத்துசண்டை வீராங்கனை - ஐரா அகர்வால் கொடுத்த ஷாக்!
ஒருபுறம் சீரியல் நடிகை, மறுபுறம் குத்துசண்டை வீராங்கனை - ஐரா அகர்வால் கொடுத்த ஷாக்!
ஒருபுறம் சீரியல் நடிகை, மறுபுறம் குத்துசண்டை வீராங்கனை – ஐரா அகர்வால் கொடுத்த ஷாக்!

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நம்ம மதுரை சிஸ்டர் சீரியலில் நடித்து வரும் ஐரா அகர்வால் குத்து சண்டை வீராங்கனையாகவும் திகழ்ந்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் பல தங்கப் பதக்கங்களையும் வென்று குவித்துள்ளார்.

ஐரா அகர்வால்:

பெரும்பாலும் சீரியல்களில் நடித்துவரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள், நடிப்பினையும் தாண்டி ஏதோ ஒரு விஷயத்தில் சாதித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் முக்கிய பிரபலமாக இருந்து வரும் ஐரா அகர்வால் சர்வதேச குத்துச்சண்டை வீராங்கனையாகவும் திகழ்ந்துவருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சௌத் இந்தியா பேஷன் பேஜன்ட் போட்டியில் வெற்றிவாகை சூடினார். இந்த வெற்றிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்தன. இதன்படி 2016 ஆம் ஆண்டு வாடு வீடு கல்பனா என்கிற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

செம்பருத்தி ஷபானாவுடன் ஜோடி சேரும் பாரதி – விரைவில் அறிமுகமாகும் புத்தம்புதிய நெடுந்தொடர்!

இதனை தொடர்ந்து கட்டுப்பய சார் இந்த காளி மற்றும் தாயம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இந்த திரைப்படத்திற்கு பின் படவாய்ப்புகள் சரியாக கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் நுழைந்தார். அதாவது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கங்கா சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கண்மணி, வானதி ஆகிய சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழில் ஒளிபரப்பான ராஜா மகள் ஆகிய தொடர்களில் நடித்தார்.

தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நம்ம மதுரை சிஸ்டர் என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், குத்து சண்டை போட்டிகளிலும் தங்க பதக்கம் வென்றிருக்கிறார். தற்போது கூட ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 48 கிலோ லைட் வெயிட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். பல சீரியல்களில் நடித்து கொண்டிருந்தாலும் சமூக வலைப்பக்கங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது எடையை தூக்குவது போன்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!