செம்பருத்தி ஷபானாவுடன் ஜோடி சேரும் பாரதி – விரைவில் அறிமுகமாகும் புத்தம்புதிய நெடுந்தொடர்!
விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் கல்யாணம் கல்யாணம் தொடரில் பாரதிக்கு ஜோடியாக ஷபானா நடிக்கவுள்ளார். மேலும், ஷாபனாவிற்கு அண்ணனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கதிர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்யாணம் கல்யாணம்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கிறது. அதாவது அன்றாடம் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் காட்சிகளை விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் அப்படியே படம் போட்டுக் காட்டி கொண்டிருப்பதால் இந்த சீரியல்களுக்கு மக்களின் ஆதரவு இருந்து வருகிறது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் கல்யாணம் என்கிற புத்தம் புதிய நெடுந்தொடர் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்த கல்யாணம் கல்யாணம் தொடரில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வருபவர் தான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாரதிக்கு ஜோடியாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலின் நாயகியான ஷபானா நடிக்கவுள்ளார். ஷபானாவிற்கு அண்ணனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடித்து வரும் கதிர் நடிக்கவுள்ளார். இந்த கல்யாணம் கல்யாணம் தொடரிலும் கதிருக்கு ஜோடியாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா தான் நடிக்கவுள்ளார்.
பாரதி, முல்லை மற்றும் கதிர் மூவருமே மக்களின் மத்தியில் பிரபலமான கதாபாத்திரங்கள் தான். மூவரும் ஒரே சீரியலில் நடிக்க இருப்பதால் மக்களின் ஆதரவு அதிக அளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியாயத்தின் பக்கம் நிற்கும் அண்ணன் மற்றும் சட்டத்தின் வழி நடக்கும் கணவர் இவர்களுக்கு இடையே மாட்டி கொண்டு தவிக்கும் ஷபானா என கதைக்களம் வித்தியாசமாக அமைந்துள்ளது. எப்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.