தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 10) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதரை மாவட்ட ஆணையூர் பகுதியில் அமைந்துள்ள உப மின்நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 10) மாதாந்திர பணி நடைபெற உள்ள காரணத்தால், மின்விநியோகம் தடை செய்யப்படும் மின்வாரிய செயற்பொறியாளர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
மாதம் ஒரு முறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணியும் மின்வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும். ஏனெனில் மின் கம்பங்களில் இருந்து சீரான மின் விநியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பணிகள் நடைபெறுகிறது.
TN Job “FB
Group” Join Now
மேலும், இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அதனை தொடர்ந்து மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்களும் முன்னரே செய்திக்குறிப்பு வாயிலாக அறிவிக்கப்படும். அவ்விதமாக நாளை மதுரை மாவட்டம் ஆனையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சிறப்பாசிரியர்களுக்கு உடனடியாக பணி ஆணை? வலுக்கும் கோரிக்கை!
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
தினமணி நகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி நகர், வி.எம்.டபிள்யூ காலனி, ரெயிலார் காலனி, சங்கீத் நகர், சொக்கலிங்கம் நகர், கூடல்நகர் 1 முதல் 15 தெருக்கள், வானொலி நிலைய மெயின்ரோடு, செல்லையா நகர், ஆனையூர் செக்டார் (1 மற்றும் 2), ஜெ.ஜெ. நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்கபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆக. 10) அன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.