அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் திட்டம்! அரசாணை வெளியீடு!

0
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் திட்டம்! அரசாணை வெளியீடு!
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் திட்டம்! அரசாணை வெளியீடு!
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் திட்டம்! அரசாணை வெளியீடு!

டெல்லி அரசு ஊழியர்களுக்கு சூப்பரான திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த திட்டப்படி சுலப மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் வாங்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் டெல்லியில் புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களில், மூன்றில் இரண்டு பங்கு இருசக்கர வாகனங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாணை வெளியீடு:

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் காற்று மாசு எப்போதும் அதிகரித்து காணபடுகிறது. மேலும் இந்த காற்று மாசுபாடு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும் காற்று மாசு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே டெல்லியில் காற்று மாசை குறைப்பதற்காக மின்சார வாகன பயன்பாட்டை அம்மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

அதன்படி, டெல்லி அரசு ஊழியர்கள் சுலப மாத தவணையில் மின்சார இருசக்கர வாகனங்களை வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த திட்டப்படி, டெல்லி அரசில், 2 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்கள் வேலை பார்க்கும் துறை மூலமாக மின்சார இருசக்கர வாகனங்களை வாங்கிக்கொள்ளலாம் என குறிப்பிட்டு உள்ளது. மேலும் அவர்கள் மாத சம்பளத்தில் இருந்து இரு சக்கர வாகனம் வாங்கிய பணத்திற்கான சுலப மாத தவணை (EMI) கழித்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாசுபாட்டால் ஒவ்வொரு ஆண்டும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் மின்சார வாகன பயன்பாட்டில் டெல்லியில் நிகழும் இந்த மாற்றம் சுற்றுச்சுழல் பாதுக்காப்பிற்கான ஒரு முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்துக்காக, டெல்லி அரசு சி.இ.எஸ்.எல். என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயல்பட உள்ளது. மேலும் மின்சார வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களையும் சி.இ.எஸ்.எல். அமைக்கும். இருசக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றினால், காற்று மாசை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது. இதுபோல், மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 வரை ஊக்கத்தொகை வழங்கும் மற்றொரு திட்டத்தையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி படை எடுக்க தொடங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக டெல்லி மக்கள் தற்போது அதிக அளவில் மின்சார வாகனங்களை வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!