தமிழகத்தில் ரூ.75,000 சம்பளத்துடன் ECHS வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.25 கடைசி நாள்!

0
தமிழகத்தில் ரூ.75,000 சம்பளத்துடன் ECHS வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க பிப்.25 கடைசி நாள்!
தமிழகத்தில் ரூ.75,000 சம்பளத்துடன் ECHS வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க பிப்.25 கடைசி நாள்!
தமிழகத்தில் ரூ.75,000 சம்பளத்துடன் ECHS வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.25 கடைசி நாள்!

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா எதிரொலியாக நிறுவனங்கள் முடக்கப்பட்டு, வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகவில்லை. இருப்பினும் தற்போது அனைத்து துறைகளிலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி வருகிறது. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் நல மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 7 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வகையில் மருத்துவ அலுவலர்(1) பணிக்கு விண்ணப்பதாரர் MBBS படித்திருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கான மாத சம்பளம் ரூ.75,000 ஆகும்.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடர்ந்து பல் மருத்துவ அலுவலர்(1) பணிக்கு விண்ணப்பதார் BDS படித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கபடுபவருக்கு மாத சம்பளம் ரூ.75,000 வழங்கப்படும். இந்த வகையில் செவிலியர் உதவியாளர்(1) பணிக்கு விண்ணப்பதாரர் Diploma/ Class 1 Physiotherapy courses படித்திருக்க வேண்டும். மேலும் மாத சம்பளமாக ரூ.28,100 வழங்கப்படும். இதனை தொடர்ந்து மருந்தாளுநர்(1) பணிக்கு விண்ணப்பதாரர் Diploma in Pharmacy or Degree in Pharmacy படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு ரூ.28,100 மாத சம்பளமாக வழங்கப்படும்.

IPL 2022: மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை குறிவைக்கும் 3 அணிகள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இதனை தொடர்ந்து ஆய்வக உதவியாளர்(1) பணிக்கு DMLT முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ.28,100 மாத சம்பளமாக வழங்கப்படும். சௌகிதார் – காவலர்(1) பணிக்கு 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு ரூ.16,800 மாத சம்பளமாக வழங்கப்படும். இந்த வகையில் சஃபைவாலா- துப்புரவு பணியாளர்(1) பணிக்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.மேலும் ரூ.16,800 மாத சம்பளமாக வழங்கப்படும். இந்த அனைத்து பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுய விவரக்குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தை SO ECHS (ECHS Cell), Air Force Station, Pudukkottai Road, Thanjavur – 613005 என்ற முகவரிக்கு 25.02.2022 க்குள் அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here