ரெப்போ, வீடு & வாகன கடன் வட்டி விகிதங்களில் மாற்றங்கள்? RBI ஆளுநர் விளக்கம்!
இந்திய ரிசர்வ் வங்கியில் ஆண்டுதோறும் பணக்கொள்கை குழு கூட்டம் நடைபெறும். இதில் வங்கி சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த வகையில் தற்போது கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது .
வட்டி விகிதம்:
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கு தலைமையாக உள்ளது. அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி 2022ம் ஆண்டு வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த வகையில் ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் தளங்கள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு சார்ந்த விவரங்களை சேமிப்பதை தடை செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கை பாதுகாக்கும் பொருட்டும், பண இழப்பை தடுக்கவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து தற்போது கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது. ஆண்டு தோறும் ரிசர்வ் வங்கியில் பண கொள்கை குழு கூட்டம் நடைபெறும். அந்த வங்கியில் 2022ம் ஆண்டுக்கான பணக்கொள்கை குழு கூட்டம் பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. கூட்டம் நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அனைவரும் எதிர்பார்த்த ‘ரெப்போ’ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 18 மாத DA நிலுவைத் தொகை? மார்ச் மாதம் அறிவிப்பு!
மேலும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிக்கு விகிதம் மாற்றமின்றி 4% ஆகவே தொடரும் என்றும் பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே தொடரும் என்று அவர் கூறியுள்ளார். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதமும் அதே நிலையில் தொடரும் வங்கி டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி 3.35 சதவீதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.