மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 18 மாத DA நிலுவைத் தொகை? மார்ச் மாதம் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - 18 மாத DA நிலுவைத் தொகை? மார்ச் மாதம் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - 18 மாத DA நிலுவைத் தொகை? மார்ச் மாதம் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 18 மாத DA நிலுவைத் தொகை? மார்ச் மாதம் அறிவிப்பு!

நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த 18 மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாத இறுதிக்குள் வெளியாகலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அகவிலைப்படி (DA) தொகை 31% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த தொகை எப்போது அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை மீண்டுமாக 3 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் 3 சதவீத DA உயர்வினால் அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.20,000 வரை அதிகரிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

இப்போது ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களின் DA தொகை அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் அக்டோபரில் 3 சதவீதமும், ஜூலையில் 11 சதவீதமும் அதிகரித்து, தற்போதைய அகவிலைப்படி விகிதம் 31 சதவீதமாக உள்ளது. இந்நிலையில்அடுத்த 3% அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான AICPI தரவுகளின்படி, டிசம்பர் 2021 வரை DA தொகை 34.04% ஐ எட்டியுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அந்த வகையில் அடிப்படை ஊதியத்தின் மீதான DA தொகை 3% உயர்வுக்குப் பிறகு ஆண்டுக்கு ரூ.18,000 லிருந்து ரூ.73,440 ஆக அதிகரிக்கும். இப்போது டிசம்பர், 2021க்கான AICPI-IW தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் AICPI தரவு 0.3 புள்ளிகள் குறைந்து 125.4 ஆகவும், குறியீடு ஒரு புள்ளி குறைந்து 361 புள்ளிகளை எட்டியுள்ளது. அதாவது அகவிலைப்படிக்கான சராசரி 12 மாதக் குறியீடு 351.33 அதாவது 34.04% என்ற சராசரிக் குறியீட்டில் இருக்கும். ஆனால் DA நிலுவைத்தொகை முழுவதுமாக செலுத்தப்பட்டால் ஜனவரி 2022க்கான மொத்த DA 34% ஆக இருக்கும்.

இந்நிலையில், ஹோலிக்கு முன் அகவிலைப்படி (DA) உயர்வு குறித்து மத்திய அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48 லட்சம் அரசு ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். முன்னதாக 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் DA அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அது நடக்கவில்லை. ஆனால் தற்போது வரவிருக்கும் ஹோலி பண்டிகைக்கு முன் DA உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here