IPL 2022: மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை குறிவைக்கும் 3 அணிகள் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்த ஆண்டு IPL தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் BCCI அறிவிப்பின்படி தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இதில் CSK அணியில் கடந்த ஆண்டு வரை விளையாடிய சுரேஷ் ரெய்னாவை அவ்வணி தக்க வைக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை 3 அணிகள் குறிவைத்துள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் வரவிருக்கும் மெகா ஏலத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்ட மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு IPL போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனை சமீபத்தில் பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி IPL போட்டிகள் மகாராஷ்டிரா – மும்பை மற்றும் புனேவில் நடைபெறும் என்று உறுதி செய்தார். எனினும், நாக் அவுட் போட்டிக்கான இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB
Group” Join Now
இந்த ஆண்டு IPL யில் பங்கேற்கும் பத்து அணிகள் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதால், 8 அணிகளால் தக்கவைக்கப்படாத வீரர்களை எந்தெந்த அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே போல கடந்த சில மாதங்களில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், அதில் சில முக்கிய வீரர்களை அணியில் சேர்க்க, நிச்சயம் அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு வரை விளையாடிய சுரேஷ் ரெய்னாவை இந்த ஆண்டு மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை 3 அணிகள் குறிவைத்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
IPL வரலாற்று லீக்கில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 32.52 சராசரியில் 5528 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் MR.IPL என்ற பட்டத்தை பெற்றார். கடந்த ஆண்டு சரியான பார்மில் இல்லாத காரணத்தினால் சென்னை அணி ரெய்னாவை விடுவித்தது. இந்த ஆண்டு ரெய்னாவை மீண்டும் ஏலத்தில் எடுக்க சென்னை அணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், புதிதாக இணைக்கப்பட்ட ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ரெய்னாவை ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.