இந்த வாரமும் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – பட்டியல் வெளியீடு!

0
இந்த வாரமும் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்த 'பாக்கியலட்சுமி' சீரியல் - பட்டியல் வெளியீடு!
இந்த வாரமும் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்த 'பாக்கியலட்சுமி' சீரியல் - பட்டியல் வெளியீடு!
இந்த வாரமும் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – பட்டியல் வெளியீடு!

ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி மதிப்பெண் பட்டியல் வெளியாவது வழக்கம். அதே போல இந்த வாரம் வெளியான டிஆர்பி ரேட்டிங்கில் வழக்கம்போல் பாக்கியலட்சுமி தொடர் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடத்தை எந்த சீரியல் பிடித்துள்ளது என்பது குறித்தான முழு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

டிஆர்பி ரேட்டிங்:

அன்றாடம் ஒவ்வொருவரின் வீட்டிலும் நடைபெறும் குடும்ப சண்டைகள், காதல் காட்சிகள், மனஸ்தாபங்கள் என அனைத்தையும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் அப்படியே பிரதிபலிப்பதால் மற்ற தொலைக்காட்சி சீரியலை காட்டிலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்களை மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு வாரமும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் தான் பெரும்பாலும் முதல் 5 இடங்களை பிடித்து விடுகின்றன. அதே போல இந்த வாரமும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருப்பது பெரும்பாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல்தான். அதாவது, கோபி பாக்கியாவிடம் மாட்டுவாரா என ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த சீரியலை கண்டு ரசித்து வருகின்றனர். வழக்கம்போல் இந்த வாரமும் பாக்கியலட்சுமி சீரியல் தான் 8.6 டிஆர்பி மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனை அடுத்து 7.9 மதிப்பெண்கள் பெற்று பாரதிகண்ணம்மா தொடர் இரண்டாம் இடத்தையும், 7.8 புள்ளிகள் பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.

சென்னையில் நாளை (ஜூலை 2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும், பார்வதி கடத்தப்பட்ட போது முதல் இரண்டு இடங்களை தக்கவைத்து வந்த ராஜா ராணி சீரியல் தற்போது 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழும் சரஸ்வதியும் தொடர் 5-ஆம் இடத்தையும், மௌனராகம் சீசன் 2 தொடர் 6 ஆம் இடத்தையும், ஈரமான ரோஜாவே தொடர் 7-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், தென்றல் வந்து என்னைத் தொடும், முத்தழகு, பாரதிதாசன் காலனி, நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, செல்லம்மா ஆகிய சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் அடுத்தடுத்த நிலையை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!