DRDO நிறுவனத்தில் 118 காலியிடங்கள் – Diploma / ITI முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
DRDO நிறுவனத்தில் 118 காலியிடங்கள் - Diploma / ITI முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

DRDO-வின் கட்டுப்பாட்டில் உள்ள Electronics and Radar Development Establishment (DRDO LRDE) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Graduate Apprentices, Diploma Apprentices, Technician Apprentices ஆகிய பணிகளுக்கென 118 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DRDO LRDE
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 118
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

DRDO LRDE பணியிடங்கள்:

DRDO LRDE நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentices பணிக்கான 118 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Graduate Apprentices – 28 பணியிடங்கள்
  • Diploma Apprentices – 60 பணியிடங்கள்
  • Technician Apprentices – 30 பணியிடங்கள்

Apprentices கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Graduate Apprentices – Engineering, Technology பாடப்பிரிவில் Graduate Degree
  • Diploma Apprentices – Engineering, Technology பாடப்பிரிவில் Diploma
  • Technician Apprentices – பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் வேலை – ரூ.1,40,000/- மாத ஊதியம்!  

Apprentices வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

Apprentices ஊக்கத்தொகை:

  • Graduate Apprentices பணிக்கு ரூ.9,000/- என்றும்,
  • Diploma Apprentices பணிக்கு ரூ.8,000/- என்றும்,
  • Technician Apprentices பணிக்கு ரூ.7,000/- என்றும் மாத ஊக்கத்தொகையாக கொடுக்கப்படும்.

DRDO LRDE தேர்வு செய்யும் முறை:

இந்த DRDO LRDE நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Merit List என்னும் தேர்வு முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

DRDO LRDE விண்ணப்பிக்கும் வழிமுறை:

Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://nats.education.gov.in/ என்ற இணைப்பில் இப்பணிகளுக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 17.03.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!