TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம் டவுன்லோட் செய்வது எப்படி?
தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வான TNPSC குரூப் 4 வரும் ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 4& VAO:
தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்து TNPSC தேர்வாணையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2,2A தேர்வு அறிவிப்பு வெளியாகி கடந்த 21ம் தேதி மாநிலம் முழுவதும் தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக அதிக எண்ணிக்கையானோர் எழுத கூடிய குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாத இறுதியில் வெளியானது. தேர்வு மூலம் 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்தது. கடந்த மார்ச் மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவுகள் தொடங்கி ஏப்ரல் 28ம் தேதியுடன் விண்ணப்ப பதிவுகளும் முடிவடைந்தது.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் கவனத்திற்கு – இப்படி ஒரு வசதியா?
இந்த குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் குரூப்4 தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். குரூப் 4 தேர்வின் வினாத்தாள் 2 பகுதிகளாக இருக்கும். முதல் பகுதியில் தமிழ் மொழி தகுதித் தேர்வு இதில் 100 வினாக்கள் இடம்பெறும். அடுத்த பகுதி பொது அறிவு பகுதி ஆகும்.
Exams Daily Mobile App Download
முதல் 100 வினாக்கள் தமிழ் மொழி பாட பகுதியில் இருந்து கேட்கப்படும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த பகுதி வினாக்கள் மதிப்பீடு செய்யப்படாது. எனவே தமிழ் பாடப் பகுதியை எப்போதும் போல் நன்றாக படித்து வைத்துக்கொள்வது அவசியம். மேலும் 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அதில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு வினாக்களும் இருக்கும். பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் உள்ளிட்ட தலைப்பில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
பாடத்திட்டம் டவுன்லோட் செய்யும் முறைகள்:
- முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மெனு பாரில் Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் சிலபஸ் என்பதில் திருத்தப்பட்ட பாடத்திட்டம் (Revised Syllabus) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- குரூப் 4 தேர்வுக்கான திருத்தப்பட்ட சிலபஸ் (Revised Syllabus) என்பதை கிளிக் செய்து, புதிய சிலபஸை டவுன்லோடு செய்து கொள்ளவும்.