சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனமும், கதை சுருக்கமும்!

0
சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனமும், கதை சுருக்கமும்!
சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனமும், கதை சுருக்கமும்!
சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனமும், கதை சுருக்கமும்!

உலகமெங்கும் இன்று மே 13 திரையரங்குகளில் நடிகர் சிவர்கார்த்திகேயன் நடிப்பிலும், அனிருத் இசையமைப்பிலும் வெளியாகியுள்ள டான் திரைப்படம் குறித்த கதை சுருக்கத்தை பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

டான் திரைப்படம்:

கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நெல்சனின் நகைச்சுவைகளாலும், நடிகர் சிவா நடிப்பாலும் ஹிட் கொடுத்ததை அடுத்து மீண்டும் வேற லெவல் திரை கதைக்களத்துடன் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதுவே இந்த இயக்குனருக்கு முதல் படம் என்பதால் அனைத்து காட்சிகளையும் புதுவிதமாக கொடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ஏனென்றால் கதைக்களம் முழுவதும் கல்லூரி மாணவர்களை கனெக்ட் செய்யும் அளவுக்கு ஒவ்வொரு காட்சிகளும் ஜாலியாக ஆரம்பித்து எமோஷனலாக முடியும் அளவுக்கு உள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு குழந்தை பிறக்கும் அழகான தருணம் – ப்ரோமோ ரிலீஸ்!

அதாவது, முதல் பாதி முழுக்க காலேஜை சுற்றி நடக்கும் சேட்டைகள் மற்றும் லூட்டிகளால் நிறைந்துள்ளது. அதில் காலேஜ் டிசிப்ளின் கமிட்டி தலைவராக தொடங்கி பிரின்சிபால் ஆக இந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் பண்ண முடியாத அளவிற்கு நகைச்சுவையோடு கலந்த மாஸ் நடிப்பை காட்டியுள்ளார் எஸ் ஜெ சூர்யா. இவருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே நடக்கும் சண்டைகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன், சூரி, பாலா, விஜய், சிவாங்கி, சமுத்திரக்கனி அவர்களின் நடிப்பை எடுத்து சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்த அளவுக்கு கதைக்களம் முழுவதும் கல்லூரி மாணவர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் ஹீரோ சிவகார்த்திகேயன் சிறுவயதிலிருந்தே அப்பாவிற்கு பயந்து வளரும் ஒரு பிள்ளை. இவர் அப்பா சமுத்திரகனியின் கட்டாயத்தினால் இன்ஜினீயரிங் காலேஜில் சேர்க்கப்படுகிறார். சிறுவயதிலிருந்தே தான் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை தேடி வரும் சிவா இறுதியில் அவர் நினைத்தது நடந்ததா? தான் ஆசைப்பட்டதை சாதித்தாரா? என்பதே டான் படத்தின் கதை சுருக்கம். இவ்வாறு படத்தின் முதல் பாகம் படு ஜாலியாகவும் இரண்டாம் பாகம் அதே அளவிற்கு சீரியஸாகவும் நகர்கிறது. மேலும், அனிருத் இசையமைப்பில் ஒவ்வொரு பாடலும் ரசிக்கத்தக்க உள்ளது. மொத்தத்தில் இந்த டான் படம் சிவகார்த்திகேயனுக்கு வசூல் மழையை பெற்று தரப்போவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here