தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 1 முதல் பொருட்கள் விநியோகம்!

0
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆகஸ்ட் 1 முதல் பொருட்கள் விநியோகம்!
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ஆகஸ்ட் 1 முதல் பொருட்கள் விநியோகம்!
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 1 முதல் பொருட்கள் விநியோகம்!

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தவர்களில் தகுதியுடைய மூன்று லட்சம் பேருக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

குடும்ப அட்டை

கடந்த 2 மாதமாக ஏற்பட்டிருந்த கொரோனா பரவலால் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய பல சேவைகள் தடைபட்டது. இதனிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்துள்ளதால், பல வகையான செயல்பாடுகளை மீட்டமைக்க சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மீண்டுமாக துவங்கியுள்ள புதிய ரேஷன் அட்டைகளை விநியோகம் செய்யும் பணிகள் மூலம் இதுவரை 3 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TN Supplementary Exam Hall Ticket 2021 – 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார். இதற்கு பின்பாக செய்தியாளார்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தில் பலர் தங்களது கோரிக்கைகளை அனுப்பி அரசிடம் இருந்து பதில்களை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1845 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 891 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 266 மனுக்கள் நடவடிக்கையிலும், 668 மனுக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களில், மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மகளிருக்கான சிறுதொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது’ என கூறியுள்ளார். இதை தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், ‘தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பம் செய்த தகுதியுடைய நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது.

இன்று முதல் இரவு ஊரடங்கில் நேர தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!

அந்த வகையில் புதிய ஸ்மார்ட் அட்டைகளுக்காக இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவற்றில் 3 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற விண்ணப்பங்களுக்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தல்களின் படி 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!