TN Supplementary Exam Hall Ticket 2021 (Out) – 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

0
TN Supplementary Exam Hall Ticket 2021 - 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!
TN Supplementary Exam Hall Ticket 2021 - 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!
TN Supplementary Exam Hall Ticket 2021 – 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, துணைத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான நுழைவுச் சீட்டு தற்போது வெளியாகி உள்ளது.

ஹால் டிக்கெட்:

கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனிடையே கடந்த மே மாதத்தில் நடத்த திட்டமிட்டிருந்ததான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கொரோனா பரவல் காரணமாக நடத்த முடியாமல் போனதால், இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து அம்மாணவர்களுக்கான தேர்வு இறுதி முடிவுகளை அறிவிக்க, மதிப்பீட்டு பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வந்தது.

இன்று முதல் இரவு ஊரடங்கில் நேர தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!

இதனிடையே ஜூலை 31 ஆம் தேதிக்குள்ளாக 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்படிருந்த நிலையில், கடந்த வாரத்தில் இறுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத, மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் துணைத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சென்னையில் வணிக வளாகங்கள், கடைகளை திறக்க தடை – ஆகஸ்ட் 9 வரை அமல்!

இதையடுத்து இம்மாணவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டுகள் இன்று (ஜூலை 31) வெளியிடப்படுவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டானது இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகும். அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த துணைத்தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே இறுதியானதாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Download Hall Ticket 2021 – Released

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!