இன்று முதல் இரவு ஊரடங்கில் நேர தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!

0
இன்று முதல் இரவு ஊரடங்கில் நேர தளர்வுகள் அமல் - மாநில அரசு அறிவிப்பு!
இன்று முதல் இரவு ஊரடங்கில் நேர தளர்வுகள் அமல் - மாநில அரசு அறிவிப்பு!
இன்று முதல் இரவு ஊரடங்கில் நேர தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!

குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதற்கு மத்தியில் இன்று (ஜூலை 31) முதல் முழு ஊரடங்கு தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 8 நகரங்களில் ஊரடங்கு நேரம் தளர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

கொரோனா 2 ஆம் அலை பாதிப்பு நாடு முழுவதும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனிடையே குஜராத் மாநிலத்தில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவானது இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை, ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் புதிய கொரோனா பாதிப்பு வழக்குகள் குறைந்து வரும் நிலையில், இன்று (ஜூலை 31) முதல் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் சில கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

செழியனிடம் குழந்தை பற்றி கேட்கும் ஜெனி, கண்டபடி திட்டும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

இது தொடர்பாக முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத் உள்ளிட்ட எட்டு முக்கிய நகரங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இருந்த இரவு ஊரடங்கு ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி தினசரி இரவு ஊரடங்கு இன்று (ஜுலை 31) லிருந்து இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை – மகிழ்ச்சி அறிவிப்பு!

மேலும் இன்று முதல் திறந்த வெளிகளில் நடைபெறும் பொது விழாக்களில் 400 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இதனிடையே குஜராத் மாநிலத்தில் 4 அடி விநாயகர் சிலையை பொது இடங்களில் நிறுவ அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மூடிய இடங்களில் 50 சதவீத திறனுடன் மட்டுமே இந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here