தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்!

0
தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – ஜூலை 24 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஜூன் 20ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து பொறியியல் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ம் வகுப்பில் மொத்தம் 9,12,620 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 8,21,994மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.07 ஆக உள்ளது. 2628 பள்ளிகளில் 12ம் வகுப்பில் இந்த வருடம் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 246 ஆகும். 12ம் வகுப்பில் மொத்தம் 7.55 (93%) லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் கல்லூரிகளில் 2022 – 2023 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. கலை & அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த ஜூன் 20ம் தேதி முதல் பொறியியல் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். முதல் நாளன்றே சுமார் 18,000 பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் பொறியியல் படிப்பு இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. டிப்ளமோ, பி.எஸ்சி., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேர தகுதியுடையோர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு வயதை குறிக்கும் வெயிட்டேஜ் திருத்தம் – அரசாணை வெளியீடு!

மேற்சொன்ன கல்வி தகுதி பெற்றவர்கள் பொறியியல் அரசு, அரசு உதவி பெறும், அண்ணா பல்கலை துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலை, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில், நடப்பாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் குறித்தும் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!