தமிழக அரசு ஊழியர்களுக்கு வயதை குறிக்கும் வெயிட்டேஜ் திருத்தம் – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு வயதை குறிக்கும் வெயிட்டேஜ் திருத்தம் - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு வயதை குறிக்கும் வெயிட்டேஜ் திருத்தம் - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு வயதை குறிக்கும் வெயிட்டேஜ் திருத்தம் – அரசாணை வெளியீடு!

தமிழக அரசுத்துறையில் அடிப்படை பணியில் இருக்கும் அரசு ஊழியர்களை தவிர மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் வயதை குறிக்கும் வெயிட்டேஜ் தற்போது திருத்தம் செய்யப்பட்டு இது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வெயிட்டேஜ் திருத்தம்:

சமீப காலமாக தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அரசுத்துறையில் அடிப்படை பணியில் இருக்கும் அரசு ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் வயதை குறிக்கும் வெயிட்டேஜ் திருத்தம் செய்யப்பட்டு இது குறித்த அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அடிப்படை விதிகள் 56(3)(d)ன் கீழ் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வயதை குறிக்கும் வெயிட்டேஜ் திருத்தம் மே 7 2020 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Exams Daily Mobile App Download

இது குறித்த அரசாணையில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 313வது பிரிவுடன் வாசிக்கப்பட்ட 309வது பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் இதர அனைத்து அதிகாரங்களையும் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆளுநர் இதன் மூலம் அடிப்படை விதிகளில் பின்வரும் திருத்தங்களைச் செய்கிறார். இதன் மூலம் செய்யப்பட்ட திருத்தம் 7 மே 2020 மற்றும் பிப்ரவரி 25, 2021 அன்று நடைமுறைக்கு வந்ததாக கருதப்படும்.

TN TRB விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

மேலும், அடிப்படை விதிகளில், விதி 56ன் கீழ் ஊழியர்களின் வயதைக் குறிக்கும் வெயிட்டேஜ், தமிழ்நாடு அரசின் அடிப்படைப் பணியில் உள்ள அரசு ஊழியர்களைத் தவிர மற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாற்றப்படும். அந்த வகையில் 54 வயது மற்றும் அதற்கும் குறைவானவர்களுக்கு 5 ஆண்டுகள் வெயிட்டேஜ் இருக்கும். அதே போல 55 ஆண்டுகள் (4 ஆண்டுகள்) 56 ஆண்டுகள் (3 ஆண்டுகள்), 57 ஆண்டுகள் (2 ஆண்டுகள்), 58 ஆண்டுகள் (1 ஆண்டு) என்ற அடிப்படையில் வெயிட்டேஜ் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!