ஆதார் கார்டில் முகவரியை மாற்ற திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிஜிலாக்கர் ஆவணங்கள் அப்டேட்!

0
ஆதார் கார்டில் முகவரியை மாற்ற திட்டமிடுவோர் கவனத்திற்கு - டிஜிலாக்கர் ஆவணங்கள் அப்டேட்!
ஆதார் கார்டில் முகவரியை மாற்ற திட்டமிடுவோர் கவனத்திற்கு - டிஜிலாக்கர் ஆவணங்கள் அப்டேட்!
ஆதார் கார்டில் முகவரியை மாற்ற திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிஜிலாக்கர் ஆவணங்கள் அப்டேட்!

நாம் அன்றாட வாழ்வில் முக்கிய ஆவணங்களாக விளங்கும் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவைகளை தற்போது எளிதாக புதுப்பிக்கலாம். மேலும் ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியை தானாகவே புதுப்பிக்கும் படியான நடைமுறைக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

டிஜிலாக்கர்:

இந்தியாவில் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, போன்ற ஆவணங்கள் முக்கிய ஒன்றாக விளங்கி வருகிறது. தனிப்பட்ட வேலைகளுக்கும் தொழில் சார்ந்த நிறுவன வேலைகளுக்கும் இவை பயன்படுகிறது. அதனால் இந்த ஆவணங்களை நாம் எப்போதும் கைகளில் வைத்திருப்பது அவசியமாகும். சில நேரங்களில் இதை நாம் மறந்து விட்டு செல்ல நேரிடும் மேலும் எதிர்பாராமல் தொலைக்க நேரிடும். இந்த நிலையில் பொது மக்களுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக டிஜிலாக்கர் செயலி உருவாக்கப்பட்டது.

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் PF நாமினியை இணைப்பது எப்படி?

இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஆவணத்தினை டிஜிட்டல் முறையில் தேவைப்படும் போது எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாலிசி ஆவணங்கள், ஆதார் கார்டு, உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் இந்த டிஜிலாக்கரில் வைத்து கொள்ளலாம். தற்போது இந்த டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள விவரங்களை எளிதாக புதுப்பிக்கும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதாவது டிஜிலாக்கர் பயன்படுத்தும் பயனாளிகள் முதலில் தங்களின் ஆதார் அட்டை முகவரியில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு டிஜிலாக்கரில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் உள்ள முகவரி தானாகவே புதுப்பிக்கப்படும். இதன் மூலம் இனி தனித்தனியாக ஆவணங்களில் விவரங்களை மாற்றம் செய்ய தேவையில்லை ஆதார் விவரத்தை மாற்றினால் போதுமானது. தற்போது கூடுதல் அம்சமாக டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள ஆவணங்களை பயனர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!