EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் PF நாமினியை இணைப்பது எப்படி?

0
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் PF நாமினியை இணைப்பது எப்படி?
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் PF நாமினியை இணைப்பது எப்படி?
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் PF நாமினியை இணைப்பது எப்படி?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் EPFO அமைப்பு, அனைத்து PF கணக்குதாரர்களும் தங்கள் கணக்குகளுக்கு ஒரு நியமனத்தை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கிய நிலையில், இந்த செயல்முறைகளை மேற்கொள்ள சில எளிய ஆன்லைன் வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

PF கணக்கு மாற்றம்

தற்போது நாடு முழுவதும் மில்லியன் கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதியை வழங்குகிறது. இப்போது இந்த ஆண்டின் தொடக்கத்தில், EPFO அமைப்பு அனைத்து PF கணக்கு வைத்திருப்பவர்களும் தங்கள் குறிப்பிட்ட கணக்குகளுக்கு ஒரு நியமனத்தை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கி அறிவிப்புகளை வெளியிட்டது. இது ஒரு உறுப்பினரின் மரணத்தை விளைவிக்கும் விபத்து ஏற்பட்டால் நிதியை மாற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்தியது.

TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை தகவல்கள் இதோ!

இது குறித்து EPFO வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, PF கணக்குதாரரின் நாமினி இறந்தால், அந்த உறுப்பினரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் PF கணக்கை பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில் உறுப்பினர்கள் PF கணக்கிற்கான பரிந்துரையை சமர்ப்பிக்க அல்லது மாற்றுவதற்கான வாய்ப்பு ஆன்லைன் போர்ட்டல் மூலம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த EPFO அமைப்பு, ‘EPF உறுப்பினர்கள் ஏற்கனவே உள்ள EPF அல்லது EPS நியமனத்தை மாற்றலாம். விரும்பினால் புதிய நியமனத்தை சமர்ப்பிக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

  • அந்த வகையில் EPFO நாமினியை ஆன்லைனில் இணைப்பதற்கான சில எளிய படிகளை விரிவாக பாப்போம்:
  • முதலில் EPFO அமைப்பின் epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில், ‘சேவைகள்’ பகுதிக்கு செல்லவும்.
  • இப்போது ‘ஊழியர்கள்’ பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.

  • அங்கு ‘உறுப்பினர் UAN / ஆன்லைன் சேவைகள்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து இ-நாமினேஷன் பிரிவில் கிளிக் செய்யவும்.
  • இப்போது, ‘விவரங்களை வழங்கு’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தேவையான தகவலை உள்ளிடவும்.
  • அடுத்து ‘நாமினேஷன் விவரங்கள்’ என்பதைக் கிளிக் செய்து தேவையான தகவலை உள்ளிடவும்.
  • பிறகு சேமி என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது OTP ஐ உருவாக்கி அதை உறுதிப்படுத்த இணையதளத்தில் சமர்ப்பிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!