TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை தகவல்கள் இதோ!

0
TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - சிலபஸ், தேர்வு முறை தகவல்கள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - சிலபஸ், தேர்வு முறை தகவல்கள் இதோ!
TNPSC குரூப் 4 VAO தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – சிலபஸ், தேர்வு முறை தகவல்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வரும் TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வின் பாடத்திட்டம், தேர்வு முறை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

சிலபஸ், தேர்வு முறை தகவல்கள்:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வுகளை TNPSC நடத்தி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் TNPSC தேர்வுகள் நடத்தப்படவில்லை, இந்நிலையில் தற்போது நிலைமை சீராகி வருவதால் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் பெரிதும் எதிர்நோக்கும் தேர்வுகள் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வு ஆகும்.

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் மாதத்தில் 11 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

குரூப் 4 தேர்வு மூலம் அமைச்சரவை பணிகள், தட்டச்சாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இத்தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. குரூப் 4 தேர்வில் கொள்குறி வினா (ஓஎம்ஆர்) வகையில் கேள்விகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த தேர்வை எழுதலாம். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வில் பொது அறிவில் 75 வினாக்கள், திறனறிவு மற்றும் புத்திகூர்மை 25 வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் நூறு வினாக்கள் இருக்கும்.

மொத்தம் 200 மதிப்பெண்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். பொது அறிவியல், நாட்டு நடப்புகள், புவியியல், இந்தியா மற்றும் தமிழகத்தின் வரலாறு மற்றும் கலாசாரம் இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம் ஆகியவற்றை பொது அறிவு பிரிவில் பாடங்களாக இருக்கும். தேர்வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட OMR தாளில் பதில்களை குறிக்க வேண்டும். தேர்வுக்கு பின்னர் தேர்வர்கள் அவர்களின் பதில்களைக் சரிபார்க்க TNPSC விடைக் குறிப்புகளை வெளியிடும். இதன்மூலம் ஏதேனும் விடையில் தவறு இருந்தால் ஆட்சேபனைகளை மாணவர்கள் எழுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் 4 தேர்வில் சரியான பதில்களுக்கு தலா 1.5 மதிப்பெண் வழங்கப்படும் தவறான பதில்களுக்கு எந்த மதிப்பெண் குறைப்பும் செய்யப்படாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!