விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் தல தோனி – ரசிகர்கள் உற்சாகம்! அவரே வெளியிட்ட பதிவு!

0
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் தல தோனி - ரசிகர்கள் உற்சாகம்! அவரே வெளியிட்ட பதிவு!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் தல தோனி - ரசிகர்கள் உற்சாகம்! அவரே வெளியிட்ட பதிவு!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் தல தோனி – ரசிகர்கள் உற்சாகம்! அவரே வெளியிட்ட பதிவு!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் விக்னேஷ் சிவன். அவர் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் என்பதால் தோனியை சந்தித்து வாழ்த்துக்களை சொல்லி புகைப்படம் ஒன்றை எடுத்து இருக்கிறார்.

விக்னேஷ் சிவன்:

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகை, நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து இளம் இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன்.இவர் லெடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலர். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கம் மட்டுமல்லாமல் இதுவரை இருபத்தியெட்டு பாடல்களையும் இயற்றியிருக்கிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கடை திறப்பு விழாவில் நடந்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

இவர் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா சேர்ந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ரசிகர்கள் பலர் அவரது படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட இவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகராம். அதனால் சமீபத்தில் அவரை நேரில் சந்தித்த அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து இருக்கிறார்

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் சுசித்ரா வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் எம்.எஸ். தோனியை விரைவில் இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் சினிமா பக்கம் கவனத்தை செலுத்தி வரும் நிலையில், தோனியும் விரைவில் கோலிவுட் படத்தில் நடிக்கப் போகிறார் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் இவரின் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தியேட்டர்களில் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!