விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கடை திறப்பு விழாவில் நடந்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" கடை திறப்பு விழாவில் நடந்த சம்பவம் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கடை திறப்பு விழாவில் நடந்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அண்ணன் தம்பிகள் தங்களது முழு உழைப்பையும் போட்டு புது கடை திறந்து இருக்கின்றனர். இந்நிலையில் அந்த கடையில் சீரியல் நட்சத்திரங்கள் செய்த லூட்டிகள் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்திற்கு உதாரணமாக இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் இணைந்து திருமணத்திற்கு பின்னர் கூட ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற ஒரே ஒரு கடை தான் அவர்களின் குடும்பத்தையே காப்பாற்றி வருகிறது, அதில் இருந்து அடுத்த நிலைக்கு போக வேண்டும் என்ற ஆசையால் அவர்கள் அனைவரும் இணைந்து தங்களது முழு உழைப்பையும் போட்டு பெரிய கடை ஒன்றை கட்டுகின்றனர்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் சுசித்ரா வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

அதை திறக்க பல தடைகள் வருகிறது. ஆனால் அந்த தடைகளை மீறி கடையை திறக்கின்றனர். மேலும் சொந்தங்கள் சூழ மேளதாளத்துடன் கடை திறக்கப்படுகிறது. கடையை அந்த குடும்பத்தின் குழந்தைகளான கயல் மற்றும் பாண்டியன் இணைந்து திறந்து வைக்க குடும்பமே அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். மேலும் தனம் குடும்பமும், மீனா குடும்பமும், முல்லை குடும்பமும் வந்து விழாவை சிறப்பித்து வைத்துள்ளனர். இனி சொந்தமாக பெரிய வீடு கட்டுவதே குடும்பத்தின் ஆசையாக இருக்கிறது.

“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடை திறப்பு விழாவில் சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் செய்த லூட்டி வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கஸ்தூரி, ஐஸ்வர்யா, மீனாவின் அம்மா ஆகியோர் இருக்கின்றனர்,. அவர்கள் வடிவேலுவின் டயலாக் ஒன்றை செய்து வீடியோவாக பதிவிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!