அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!

0
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கைகள்!

2003 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த பணியாளர்கள் இறந்து போனால் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. எனவே அந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்,போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம், அரசுக்கு முன்வைத்து உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்:

தமிழகத்தில் கடந்த வருடம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக கட்சி அமோக வெற்றியை தழுவியது. மேலும் ஆட்சிக்கு வந்தால் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதாக மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அடிப்படையில் பல்வேறு நலத்திட்டங்களை இந்த 11 மாத ஆட்சி காலத்தில் நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முக்கிய வாக்குறுதியாக கருதப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இதனால் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ராஜஸ்தான் மாநிலத்தின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் விரைந்து இறுதி செய்யப்பட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியீடு!

மேலும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்து, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து முக்கிய கோரிக்கையாக பணியாளர் பற்றாக்குறை காரணமாக சில இடங்களில் பேருந்து இயக்கம் தடைபட்டு உள்ளது. எனவே, காலிப் பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!