திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிசம்பர் மாத உற்சவ விழாக்கள் அறிவிப்பு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - டிசம்பர் மாத உற்சவ விழாக்கள் அறிவிப்பு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - டிசம்பர் மாத உற்சவ விழாக்கள் அறிவிப்பு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிசம்பர் மாத உற்சவ விழாக்கள் அறிவிப்பு!

திருமலை திருப்பதியில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழாக்களின் பட்டியல் தேவஸ்தானத்தால் வெளியிடப்படும். அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான உற்சவ விழாக்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உற்சவ விழாக்கள்:

ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில் ஆகும். இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக திருமலை திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதால் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இம்மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

ஆனால் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு நேரடி முறையில் டோக்கன் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டு ஆன்லைன் முறையில் முன்பதிவு வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளான முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி உள்ளிட்டவைகளை முறையே கடைபிடித்து அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (நவ.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் விழாக்களின் பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான விழாக்களின் பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது.

உற்சவ விழாக்கள்:

  • டிச.2 – தன்வந்திரி ஜெயந்தி.
  • டிச.4 – கஜ வாகன சேவை திருச்சானூருக்கு காசுமாலை ஊர்வலம்
  • டிச.8 – பஞ்சமி தீர்த்தம் திருச்சானூருக்கு சீர்வரிசை ஊர்வலம்
  • டிச.12 – கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை பேடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
  • டிச.14 – கீதா ஜெயந்தி
  • டிச.15 – சக்கரதீர்த்த முக்கொடி
  • டிச.16 – தனூர்மாதம் ஆரம்பம்
  • டிச.18 – ஸ்ரீ தத்த ஜெயந்தி
  • டிச.19 – கீதா ஜெயந்திபௌர்ணமி கருட சேவை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!