தனது குழந்தையுடன் ஆலியா மானஸா வெளியிட்ட கியூட் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
தனது குழந்தையுடன் ஆலியா மானஸா வெளியிட்ட கியூட் வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
தனது குழந்தையுடன் ஆலியா மானஸா வெளியிட்ட கியூட் வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
தனது குழந்தையுடன் ஆலியா மானஸா வெளியிட்ட கியூட் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயான முன்னணி சீரியல் நடிகை ஆலியா மானஸா தனது பெண் குழந்தை ஐலாவுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கியூட்டான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆலியா மானஸா

தமிழ் சின்னத்திரை உலகில் தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்து முன்னணி இடத்தை பிடித்திருக்கும் ஒரு நடிகை ஆலியா மானஸா. வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து விஜய் டிவியில் தனக்கான இடத்தை தக்கவைத்திருக்கும் நடிகை ஆலியா மானஸா இப்போது சீரியல்களில் நடிப்பதை விட்டு விலகி இருக்கிறார். பொதுவாக சினிமா அல்லது சின்னத்திரையை பொறுத்தவரை பல புதிய முகங்களின் அணிவகுப்பு காணப்படுவதால், திருமணமான பெண்கள் நாயகிகளாக வலம் வருவது கடினமான விஷயமாக தான் இருந்து வருகிறது.

ExamsDaily Mobile App Download

ஆனால், சீரியல்களில் நடித்து வந்த காலத்திலும், இப்போது நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்திருக்கும் காலத்திலும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுபவராக இருக்கிறார் ஆலியா மானஸா. இதற்கு காரணம் அவரது நடிப்பும், அந்த தொழிலுக்கு அவர் கொடுக்கும் அர்ப்பணிப்பும் தான். அந்த வகையில், சமீபத்தில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வந்த ஆலியா மானஸா திடீரென 2வது முறையாக கர்ப்பமாக, பிரசவத்திற்காக சில காலம் மட்டும் ஓய்வு எடுக்க சென்ற அவர் இப்போது சீரியலில் இருந்து முழுமையாக விலகி இருக்கிறார்.

முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்க போகும் கதிர் தனம், கஸ்தூரி கேள்விகளால் அதிர்ச்சி அடையும் மீனா – இன்றைய எபிசோட்!

அந்த வகையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயான நடிகை ஆலியா மானஸா வழக்கம் போல சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்பட்டு வருகிறார். பிரசவத்திற்கு பின்பு தனது மகனுடன் நேரத்தை செலவழித்து வரும் ஆலியா இப்போது தனது மூத்த மகள் ஐலாவுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காரில் அமர்ந்திருக்கும் ஆலியா தனது மகளிடம் யாரு கியூட்டாக இருக்கிறது என்று கேள்வி கேட்க அந்த குழந்தை, பேபி என்று தனது மழலையில் சொல்வது போல காட்சிகள் இடம்பிடித்துள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!