நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 06,2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 06,2019

டிஸுவா பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் உள்ளது?

நாகலாந்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது, டிஸுகோ பள்ளத்தாக்கு பிளாஸ்டிக் இல்லா மண்டலமாக மாறியுள்ளது. மிகவும் பாராட்டப்படக்கூடிய முன்முயற்சியான இந்த அழகிய பள்ளத்தாக்கை ‘பிளாஸ்டிக்-இல்லா மண்டலம்’ ஆக அறிவித்தது, தெற்கு அங்கிமி இளைஞர் அமைப்பால் எடுக்கப்பட்ட முயற்சியாகும் (SAYO). இந்த அமைப்பு சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாப்பதற்காக உறுதிமொழி எடுத்துள்ளது.

சமீபத்தில் ஆர்டிக் ரயில் சேவை தொடங்கப்பட்ட நாடு எது?

ரஷ்யாவின் முதல் சுற்றுலா ரயில் சேவை ஆர்க்டிக் இருந்து நோர்வே வரை செல்லும் ரயிலில் சுமார் 91 பயணிகளுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கியது. இரயிலுக்கு “Zarengold” என பெயரிடப்பட்டுள்ளது,இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிலையத்திலிருந்து Petrozavodsk, Kem மற்றும் Murmansk வழியாக நோர்வே சென்றடைகிறது.

எந்த நகரில் ஹாக்கி ஆண்கள் தொடர் இறுதிப் போட்டி தொடங்கியது?

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஆண்கள் ஹாக்கி இறுதி தொடர் புவனேஷ்வரில் துவங்கியது. காலையில் நடைபெற்ற முதல் போட்டியில், அமெரிக்கா 2 கோல்களில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. இரண்டாவது போட்டி போலந்து மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே நடைபெறும். ரஷ்யாவுக்கு எதிராக எட்டு முறை சாம்பியன்வென்ற இந்தியா தனது ஆட்டத்தை தொடங்க உள்ளது.

எந்த நாடு முதன் முறையாக கடலில் இருந்து விண்வெளி ராக்கெட் செலுத்தியது?

சீனா முதன் முறையாக கடலில் இருந்து ஒரு விண்வெளி ராக்கெட் ஒன்றை செலுத்தியது. லாங் மார்ச் 11 ராக்கெட்டை எல்லோ கடலில்(Yellow Sea) இருந்து ஒரு கப்பல் மூலம் செலுத்தப்பட்டது.

ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி காண்டர் பிட்ஸ்ஜெரால்ட் U21 ஐ கைப்பற்றிய நாடு எது?

அயர்லாந்தின் டப்ளினில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி காண்டர் பிட்ஸ்ஜெரால்ட் U21 சர்வதேச 4 நாடுகளின் பட்டத்தை வென்றது.

சீன வங்கி இந்தியாவில் தனது முதல் கிளையை தொடங்கிய இடம்?

சீனாவின் நான்கு மிகப் பெரிய அரச வர்த்தக வங்கிகளுள் ஒன்றான சீன வங்கி இந்தியாவில் தனது முதல் கிளையை மும்பையில் தொடங்கி உள்ளது.

மத்திய வீடுப்புற மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஸ்வச் ஸர்வேக்ஷன் 2020 லீக்கை தொடங்கி வைத்த இடம்?

மத்திய வீடுப்புற மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புது தில்லியில் ஸ்வச் ஸர்வேக்ஷன் 2020 லீக்கை தொடங்கிவைத்தார்.

உலக வங்கி 2019 ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எவ்வளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது?

உலக வங்கி 2019 ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி6% ஆகும் என்று அறிவித்துள்ளது. இது ஜனவரி மாதத்தின் அறிவிப்பை விட 0.3% குறைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் வளர்ச்சி 2.7% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு ஆண்டுக்கு 7.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் 7.2% ஆக இருந்தது .

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here