நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 07, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 07, 2019

முக்கியமான நாட்கள்

ஜூன் 7  – உலக உணவு பாதுகாப்பு தினம்
  • 2018 டிசம்பரில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஏற்றுக்கொண்டபிறகு முதல் உலக உணவு பாதுகாப்பு தினம் , 2019 ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
  • இந்த ஆண்டு உலக உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாப்படுவதற்கும் மேலும் இனி வரும் ஆண்டுகளில் கொண்டாடுவதற்கும் உலக சுகாதார நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் இணைந்து (FAO)உறுப்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளது.
  • 2019 Theme: “Food Safety, everyone’s business”

தேசிய செய்திகள்

புது தில்லி
ஹிமாச்சல நாட்டுப்புற  கலைகள் பற்றிய அரிய படைப்புகள்கண்காட்சி
  • புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் ‘ஹிமாச்சல நாட்டுப்புற கலைகள் பற்றிய அரிய படைப்புகள்’ என்ற  கண்காட்சியை கலாசார அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் திறந்துவைத்தார்.  இந்த கண்காட்சி தேசிய அருங்காட்சியகம் மற்றும் நாட்டுப்புற கலை, குரூகிராமால் ஏற்பாடு செய்யப்பட்டது , இதில் 240 க்கும் அதிகமான கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தின் நாட்டுப்புற கலை பாரம்பரியத்தை உயர்த்துவதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும்.
ஒடிசா
ஒடிசாவில் ஆலிவ் ரிட்லியைப் பற்றிப்படிக்க ஆய்வு மையம்
  • ஆலிவ் ரிட்லிஸின் வெகுஜன கூடு மற்றும் அது தொடர்பான சுற்றுச்சூழல் காரணிகள் பற்றிய ஆய்வுக்காக ஒடிசா கடற்கரையிலுள்ள ரிஷிகுல்யா நதிக்கரைக்கு அருகில் ஒரு நிரந்தர ஆராய்ச்சி மையத்தை நிறுவ ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷிகுல்யா நதிக்கரை அருகே உள்ள காளிகோட் வனப்பகுதியில் இந்த மையத்தை அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
  • இந்த மையம் ஆமைகள், கடலோர தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பழக்கம் மற்றும் வாழ்விடம் பற்றிய விரிவான ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படும்.
கர்நாடகா
யக்ஷகண அத்தியாயங்கள் விரைவில் மராத்தியில் அறிமுகம்
  • புனேவிலிருந்து வந்த யக்ஷகன ஆர்வலர்கள் குழு யக்ஷகண அத்தியாயங்களை மராத்தி மொழியில் எழுதி அதை நாடகமாக்க முயற்சித்து வருகின்றனர். யக்ஷகண ஒரு சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான கலை வடிவமாகும்.
  • கர்நாடகா (இந்தியா) மாநிலத்தில் உள்ள உடுப்பியில் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய நாடக வடிவம் யக்ஷகண ஆகும். யக்ஷகணம் – நடனம், இசை, உரையாடல், உடைகள், அலங்காரம் மற்றும் மேடை உத்திகள், தனித்துவமான பாணி மற்றும் வடிவத்தைக்கொண்டது. பக்தி இயக்கத்தின் காலத்தின் பாரம்பரிய இசையிலிருந்து இந்த யக்ஷகண நடனம் உருவானது என நம்பப்படுகிறது.

சர்வதேச செய்திகள்

இந்திய வம்சாவளியை சார்ந்தவர்  இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலக வாரியத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • வெளிநாட்டு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் முதன்மை பொருளாதார வல்லுனராக குமார் ஐயர் இங்கிலாந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் FCO நிர்வாகத்தில் நியமிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி நபர் ஆவார்.
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை கைவிட போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது
  • ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான அணு ஆயுத ஒப்பந்த உடன்பாட்டை கைவிடபோவதாக கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா ஒப்பந்தத்தை விரிவுபடுத்தும் பேச்சுவார்த்தையில்  எவ்வித அக்கறையும் காட்டாத காரணத்தினாலே இம்முடிவை எடுத்திருப்பதாக ரஷ்யா அதிபர் புதின் கூறியுள்ளார். இது அணு ஆயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது
  • இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரால் ப்ராக் நகரில் 2010 இல் கையெழுத்திடப்பட்டது, இது 2021 ஆம் ஆண்டில் முடிவடைகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

டா, ரோபோ
  • ஏடன் மெல்லர் என்பவர் ஐ-டா, ரோபோவை வடிவமைத்துள்ளார், இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட ரோபோ ஆகும். இது ஒரு சிறந்த ஓவிய கலைஞராக உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மில்லியன் யூரோ மதிக்கத்தக்க ஓவியத்தை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக துல்லியமாக வரையும் வல்லமைபொருந்திய ரோபோவாக செயல்படுகிறது.

வணிக மற்றும் பொருளாதார செய்திகள்

அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், சீனா  5ஜி சேவையைத் தொடங்க அனுமதியளித்துள்ளது
  • அமெரிக்காவுடனான தொழில்நுட்பம் மற்றும் வணிகம் மீது உள்ள பதட்டங்களுக்கு மத்தியில், சீனா உலகளாவிய போட்டியில் தொலைத்தொடர்பு அமைப்புகளில் முன்னோக்கி நகர்வதற்காக நாட்டில் பெரிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு 5G சேவைகளைத் தொடங்க அனுமதியளித்துள்ளது .
  • 5G அடுத்த தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பம் ஆகும். இது 4G LTE நெட்வொர்க்குகளை விட 10 முதல் 100 மடங்கு வேகமாக இருக்கும்.
வர்த்தக மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் G20 அமைச்சரவை கூட்டம்
  • மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் ரயில்வே அமைச்சரான பியுஷ் கோயல் இந்திய வர்த்தக மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் G20 அமைச்சர் சந்திப்பை  வழி நடத்த உள்ளார். வர்த்தக மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் G20 அமைச்சரவை கூட்டம் ஜூன் 8 முதல் 9, 2019 வரை சுகுபா நகரில், இபராக்கி பெர்பெக்சர் , ஜப்பானில் நடைபெற உள்ளது.
  • இந்திய வர்த்தக அமைச்சர் உலகளாவிய வர்த்தக நிலைமை, உலக வணிக அமைப்பு மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் ஆகியவைகளை பற்றி கலந்துரையாட உள்ளார். அவர் தற்போதைய சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பற்றி சந்திப்பில் கலந்துகொண்ட மற்ற நாடுகளின் வர்த்தக அமைச்சர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
  • முதல் முறையாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் வணிகம் அமைச்சகத்தின் அமைச்சர்கள் டிஜிட்டல் பொருளாதாரம்   G20 அமைச்சரவை  கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

நியமனங்கள்

ஜூலை மாதத்தில் விப்ரோவின் நிர்வாக தலைவர் பதவியில் இருந்து  அசீம் பிரேம்ஜி ஓய்வு பெறுகிறார்.
  • இந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதியில் விப்ரோவின் நிர்வாக தலைவர் பதவியில் இருந்து  அசீம் பிரேம்ஜி ஓய்வு பெறுகிறார். அவரின் தலைமை ஆண்டு காலம் 53 ஆண்டுகள் ஆகும் . அவரது மகன் ரிஷாத் பிரேம்ஜி நிறுவனத்தின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க உள்ளனர்.
  • தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநர் அபிதாலி ஸே நீமுச்வாலா விப்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவார் என்று குழு அறிவித்தது.

விளையாட்டு செய்திகள்

விஸ்வநாதன் ஆனந்த்  ஆர்மெக்கெதோன்  விளையாட்டில் தோல்வி அடைந்தார்.
  • நோர்வே அல்டிபாக்ஸ் செஸ் போட்டியின் ஆர்மெக்கெதோன்  விளையாட்டில் நோர்வேயின் உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்ஸனுக்கு எதிராக விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 07, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!