நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 05,2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 05,2019

உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படும் நாள் ?

உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

ஜூலை 9-16 க்கு இடையில் சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ள விண்கலம் ?

இந்தியாவின் சந்திரனுக்கு அனுப்பும் இரண்டாவது விண்கலமான சந்திரயான்-2 ஐ சந்திரனுக்கு அனுப்ப ஜூலை 9 மற்றும் ஜூலை 16 ஆகிய தேதிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது மேலும் அதற்கான சரியான தருணத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

“2 வது உலகளாவிய இயலாமை உச்சி மாநாடு” நடைபெற உள்ள இடம் ?

“2 வது உலகளாவிய இயலாமை உச்சி மாநாடு” 2019 ஜூன் மாதம் 6-8 தேதிகளில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியில் நடைபெறுகிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் ?

தற்போதைய நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி அறிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக்கான 74 வது அமர்வுக்கான ஜனாதிபதி ?

ஐ.நா. பொதுச் சபைக்கான 74 வது அமர்வுக்கான ஜனாதிபதியாக நைஜீரியா தூதர் டிஜானி முஹம்மது-பந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2023 ஆசிய கால்பந்து கோப்பையை நடத்த உள்ள நாடு ?

2023 ஆசிய கால்பந்து கோப்பையை சீனா நடத்துகிறது.

G-20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ள இடம் ?

ஜூன் 28-29-ல் ஒசாகாவில் G-20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது .

உலக சுற்றுச்சூழல் தினம் கருப்பொருள் ?

ஒவ்வொரு உலக சுற்றுச்சூழல் தினமும் குறிப்பிட்ட சுற்றுச்சூழல் குறித்து கவனம் செலுத்துகிற ஒரு கருப்பொருளை மையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும். 2019க்கான தீம் “காற்று மாசுபாட்டை ஒழிப்போம்”.

இந்திய அரசு, தமிழ்நாடு அரசு (GoTN) மற்றும் உலக வங்கிக்கும் இடையே தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்திற்கான $ 287 மில்லியன் கடன் ஒப்பந்தம் கையெழுத்தான இடம் ?

இந்திய அரசு, தமிழ்நாடு அரசு (GoTN) மற்றும் உலக வங்கிக்கும் இடையே தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்திற்கான $ 287 மில்லியன் கடன் ஒப்பந்தம் புதுடெல்லியில் கையெழுத்தானது

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here